வயது எட்டு தான்.. ஆனால் வருடத்திற்கு ரூ.185 கோடி வருமானம்.. பெஸ்ட் யூடியூபர் இவர் தான்.. ஃபோர்ப்ஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாளுக்கு நாள் டிவி சேனல்கள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் மக்களின் பங்கும் அதிகரித்து வருகிறது. அதிலும் யூடியூப், டிக்டாக் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் இந்தியா மட்டும் அல்ல, உலக நாடுகளும் அதற்கு அடிமையாகி வருகின்றனர்.

அதிலும் காலில் போடும் செருப்பு எப்படி தைக்கலாம் என ஆரம்பித்து, சமையல் முதல் கம்ப்யூட்டரில் போடும் மென்பொருள் வரை எப்படி தயாரிப்பது, அதை எப்படி இன்ஸ்டால் செய்வது என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

அதிலும் தற்போது குழந்தைகளுக்கு மிக பொருத்தமான, தேவையான விஷயங்களை குழந்தைகளை வைத்தே வீடியோ எடுத்து வருகின்றனர்.

குழந்தைகள் வருமானம்

குழந்தைகள் வருமானம்

அதற்காக யூடியூப்பில் தனி சேனல் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ஒளிபரப்புவது வாடிக்கையான விஷயம் தான். மேலும் இதற்காக விளம்பரதாரர்களின் ஸ்பான்சர் வீடியோக்கள், விளம்பரம் வீடியோக்கள், பொருட்கள் மதிப்பீடு என குழந்தைகளை வைத்தே செய்வது என கலக்கி வருகின்றனர் குழந்தைகள், அந்த வகையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த எட்டு வயதான சிறுவன் ரியான் காஜி யூட்யூப் சேனலில் 2019ஆம் ஆண்டின் படி அதிகம் சம்பளம் வாங்கும் படைப்பாளராக இருக்கிறார் என்று ஃபோர்பஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியான் வேர்ல்டு சேனல்

ரியான் வேர்ல்டு சேனல்

ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, ரியான் காஜி யூடியூப்பில் வீடியோவில் அதிக வருமானமான 26 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 185 கோடி ரூபாயாகும். ரியான் காஜியின் பெற்றோரால் 2015ல் தொடங்கப்பட்டது தான் ரியான் வேர்ல்ட் (Ryan's World) என்ற யூடியூப் சேனல். இந்த சேனல் தற்போது 22.9 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது கவனிக்கதக்கது.

Ryan ToysReview

Ryan ToysReview

ரியான் ஆரம்பத்தில் பொம்மைகள் குறித்த விமர்சனம் Ryan ToysReview என்ற சேனல் புதுவிதமான வீடியோக்களை கொண்டிருந்தார். புதியதாக விற்பனைக்கு வந்த பொம்மைகளை வைத்து விளையாடிக் காட்டும் விதமாக அந்த வீடியோக்கள் உள்ளன. அதிலும் பல வீடியோக்கள் பில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் குழந்தைகள் மத்தியில் பெரிய அளவில் ஈர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபெடரேஷன் டிரேடு கமிஷன்

ஃபெடரேஷன் டிரேடு கமிஷன்

இந்த சேனல் உருவாக்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 35 பில்லியன் பார்வைகளை கூட எட்டியுள்ளதென Social Blade தரவுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நுகர்வோர் வழக்கறிஞர் அமைப்பான ட்ரூத் இன் அட்வர்டைசிங், அமெரிக்கா பெடரல் டிரேட் கமிஷனுக்கு புகார் அளித்த பின்னர், இந்த சேனலின் பெயர் மாற்றப்பட்டது கவனிக்கதக்கது. எனினும் இந்த சேனலின் மவுசு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் செல்கிறது.

என்ன குற்றச் சாட்டு

என்ன குற்றச் சாட்டு

ரியானின் பொம்மைகள் குறித்து விமர்சன வீடியோ செய்யப்படும் போது அந்த வீடியோக்களில் ஸ்பான்சர் செய்யப்பட்டதா என்பதை சேனல் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் மறுபுறம் பொம்மைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காண்பிப்பதற்கான பணத்தை செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Dude Perfect விஞ்சிய ரியான் வேர்ல்டு

Dude Perfect விஞ்சிய ரியான் வேர்ல்டு

ரியான் ஏஜ் (Ryan ages) என்ற சேனல் வழியாக கூடுதலாக உயர் கல்விக்கான வீடியோக்களை வழங்குகிறது. ஃபோர்ப்ஸின் தரவரிசையில், ரியான் காஜி டெக்சாஸைச் சேர்ந்த நண்பர்கள் நடத்தும் டியூட் பெர்பெக்ட் (Dude Perfect) என்ற யூடியூப் சேனலையே மிஞ்சி விட்டார் என்றும் கூறப்படுகிறது. ட்யூட் பெர்பெக்ட் சேனல் 20 மில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் அனஸ்தாசிய

மூன்றாவது இடத்தில் அனஸ்தாசிய

மூன்றாவது இடத்தில் மற்றொரு குழந்தை நட்சத்திரத்தின் சேனலான ரஷ்யாவின் அனஸ்தாசிய ராட்ஜின்ஸ்காயா 18 மில்லியன் டாலர் வருமானத்தை பெற்றுள்ளது. இவர் ஐந்து வயதான ஒரு குழந்தை நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சேனல்கள் Like Nastya Vlog" and "Funny Stacy ஆகியவை மொத்தம் கிட்டதட்ட 70 மில்லியன் சந்தாதாரர்களைப் பெருமைப்படுத்துகின்றன. இவரின் வீடியோக்கள் ரஷ்யா மற்றும் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் வீடியோக்கள் உள்ளன.

கூகுளிற்கு அபராதம்

கூகுளிற்கு அபராதம்

செப்டம்பர் தொடக்கத்தில், யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகுள் 170 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டது. எஃப்.டி.சி குழந்தை யூடியூப் பயனர்களிடமிருந்து தனிப்பட்ட தரவுகளை அனுமதியின்றி சேகரிப்பதாக குற்றம் சாட்டியது. எஃப்.டி.சி இன் கூற்றுப்படி விளம்பரதாரர்கள் குழந்தைகளை குறிவைக்க முடியும் என்றும் கூறியது.
இதன் மூலம் குழந்தைகள் ஒரு வகையில் காட்சிப்படுத்துதல் மூலம் நிறைய கற்றுக் கொள்கின்றனர். மேலும் தங்களின் திறமைகளை வைத்து யார் வேண்டுமானலும் சம்பாதிக்க முடியும் என்பதை இதை வைத்தே அறிய முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: youtube
English summary

Forbes announced Eight year old youtuber earns highest %26 million a year

Forbes announced Eight year old Ryan kaji earns highest %26 million a year in youtube channel. Dude perfect earned $20 million in second place. And third place russia’s Anastasia Radzinskaya.
Story first published: Thursday, December 19, 2019, 16:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X