என்னை மன்னித்துவிடுங்கள்.. ஒரே காலில் 900 பேரை பணி நீக்கம் செய்த CEO உருக்கம்..!

அமெரிக்காவினை சேர்ந்த நிதி நிறுவனமான பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, விஷால் கார்க் ஜூம் கால் மூலமாக 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான விஷால் கார்க் நியூயார்க் நகரில் செயல்படும், பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகின்றார்.

பல்வேறு காரணங்களினால் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு 900 ஊழியர்களை 3 நிமிடங்களுக்கும் மேலான ஜூம் காலில் பணி நீக்கம் செய்தார்.

ஊழியர்கள் அதிர்ச்சி

ஊழியர்கள் அதிர்ச்சி

ஒரே ஜூம் காலில் 900 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 9% ஊழியர்கள் ஆகும். பெட்டர்.காமின் இந்த நடவடிக்கையானது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ ஒன்று வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

என்னை மன்னித்து விடுங்கள்

என்னை மன்னித்து விடுங்கள்

சமூக வலைதளங்களில் பரவலான பல்வேறு கருத்துகளுக்கு மத்தியில், விஷால் கார்க், பணி நீக்கம் குறித்து தான் கையாண்ட விதத்திற்காக மன்னிப்புக் கோரியுள்ளார். இது குறித்து ஒரு கடித்தத்தில் பணி நீக்கம் செய்ததில் தவறு செய்து விட்டேன். பாதிக்கப்பட்ட ஊழியர்களின் பங்களிப்பிற்காக தகுந்த மரியாதை அளிக்க தவறி விட்டேன்.

கடித்தத்தில் உருக்கம்

கடித்தத்தில் உருக்கம்

ஊழியர்களுக்கு பாரட்டுகளை தெரிவிக்க தவறிவிட்டேன். அவ்வாறு செய்ததன் காரணமாக நான் உங்களை சங்கடப்படுத்தி விட்டேன். இதன் மூலம் நான் உங்களை மேலும் காயப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமான கடித்தத்தினை எழுதியுள்ளார்.

விருப்பமில்லாமல் தான் நடவடிக்கை

விருப்பமில்லாமல் தான் நடவடிக்கை

மேலும் தனது பணிக்காலத்தில் இந்த பணி நீக்கம் என்பது இரண்டாவது முறையாகும். முதல் முறை அதனை நினைத்து வருந்து கண்ணீர் விட்டதாகவும், ஆனால் இரண்டாவது முறை அப்படியில்லை. நான் தைரியமாக இருக்கிறேன். எனினும் இந்த நடவடிக்கையை எடுக்க எனக்கு துளியும் விருப்பம் இல்லை. ஆனால் வேறு வழியில்லை. மொத்தம் 15% ஊழியர்கள் அளவுக்கு பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், அது 9% குறைக்கப்பட்டது.

ஒரே காலில் பணி நீக்கம்

ஒரே காலில் பணி நீக்கம்

ஜூம் காலில் பணி நீக்கம் செய்திருந்த விஷால், நீங்கள் இதனை கேட்க விரும்பமாட்டீர்கள். நீங்கள் இந்த ஜும் காலில் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர். நீங்கள் தற்போதிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுகின்றீர்கள். உடனடியாக இப்போதிலிருந்தே பணி நீக்கம் செய்யப்படுகின்றீர்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+