கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் , பணி நீக்கம் செய்த பிறகு தான் வாழ்க்கையில் தனக்கு நிம்மதி கிடைத்திருப்பதாக பதிவு செய்திருக்கிறார்.
தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் சாவோ சன் சென், இவர் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் . 10 ஆண்டுகளாக இவர் கூகுளின் சிங்கப்பூர் அலுவலகத்தில் வாரத்திற்கு 40 மணி நேரங்கள் வேலை செய்தாராம். இந்த சூழலில் தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென கூகுள் நிறுவனம் இவரை வேலையில் இருந்து நீக்கியது.

கூகுள் நிறுவனம் தன்னை பணி நீக்கம் செய்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த சாவோ சன்னுக்கு ஒரு கல்லூரியில் பேராசிரியர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுதான் அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறது. 39 வயதாக கூடிய அவர் தாய்லாந்தில் வசித்து வருகிறார் ஒவ்வொரு வாரமும் சிங்கப்பூருக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய தேசிய பல்கலைக்கழகத்தில் வாரத்திற்கு மூன்று மணி நேரங்கள் மட்டுமே பேராசிரியராக வேலை செய்கிறார்.
இதன் மூலம் அவருக்கு மாதத்திற்கு இந்திய ரூபாயின் மதிப்பில் 2.6 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கிறதாம். டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதாக தெரிவிக்கும் அவர் இந்த பணமே தற்போது தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கான செலவினங்களுக்கு போதுமானதாக இருக்கிறது நான் இப்போது நிம்மதியாக உணர்கிறேன் என தெரிவித்திருக்கிறார் .சிங்கப்பூரில் நான் வாரத்திற்கு மூன்று மணி நேரம் வேலை செய்தாலே போதும் தாய்லாந்தில் என்னுடைய குடும்பத்திற்கு தேவையான அனைத்து செலவினங்களையும் என்னால் மேற்கொள்ள முடிகிறது என தெரிவிக்கிறார்.
கூகுள் நிறுவனம் என்னை பணிநீக்கம் செய்த பிறகு தான் நான் வாழ்க்கையில் பல விஷயங்களை உணர்ந்தேன் குறிப்பாக நிதி சார்ந்த சுதந்திரம் எது என்பதை நான் தெரிந்து கொண்டேன் என தெரிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்து இருக்கிறேன் 10 ஆண்டுகளில் என் வாழ்வின் பாதிக்கும் ஏற்பட்ட நாட்களை கூகுள் நிறுவனத்தில் தான் இருந்திருக்கிறேன் ஆனால் திடீரென அவர்கள் என்னை பணியிலிருந்து நீக்கி விட்டனர் என கூறுகிறார்.
கூகுள் நிறுவனத்தில் வேலையில் இருந்த போதே ஓய்வு காலத்திற்கு என 17 கோடி அளவிற்கு முதலீடு செய்து வைத்திருந்ததாகவும், அந்த முதலீடும் தற்போது எனக்கு உதவுகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மீண்டும் ஒரு கார்ப்பரேட் வேலைக்கு செல்ல வேண்டாம் என்பதால் தான் நான் பேராசிரியர் பணியை தேர்ந்தெடுத்தேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். யூடியூப் சேனல் வாயிலாகவும் தனக்கு தற்போது போதுமான வருமானம் வருவதாக தெரிவித்திருக்கிறார் . கூகுள் என்னை பணிநீக்கம் செய்த பிறகு நான் என் குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரம் அதிகமாக இருக்கிறது என்னுடைய வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறது இதற்கு நான் கூகுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என தெரிவிக்கிறார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications