செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் குறித்து தான் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. மனிதர்கள் செய்யக்கூடிய பல்வேறு வேலைகள் குறிப்பாக ஒயிட் காலர் வேலைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்னும் அதிக செயல் திறனோடு செய்வதால் பல்வேறு நிறுவனங்களும் மனிதர்களை பணி நீக்கம் செய்துவிட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அந்த இடத்தில் பயன்படுத்த தொடங்கிவிட்டன.
ஏஐ தொழில்நுட்பம்: எதிர்காலத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள் முற்றிலுமாக பறிபோய்விடும் என்ற அச்சம் மனிதர்கள் மத்தியில் நிலவுகிறது. அதேவேளையில் டெக் நிறுவனங்களின் தலைவர்கள் ஏஐ மனிதர்களின் வேலையை பறிக்காது மாறாக புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறி வருகின்றனர் . ஆனால் இது பொய் என கூகுள் நிறுவனத்தின் முன்னாள் வணிகப் பிரிவு அதிகாரியாக இருந்த மோ காவ் டாட் தெரிவித்துள்ளார்.

ஏஐ பற்றி கூறுவது எல்லாம் பொய்: பாட்காஸ்ட் ஒன்றில் பேசி இருக்கும் இவர், ஏஐ மூலம் புதிய வேலை வாய்ப்புகள் என இவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அது உண்மை கிடையாது ஏஐ-ஆல் அனைத்து வேலைகளுக்குமே ஆபத்திருக்கிறது ஏன் சிஇஓ பதவிகள் கூட நிச்சயம் கிடையாது என தெரிவித்திருக்கிறார். தன்னுடைய Emma.love நிறுவனமே இதற்கு சான்று என குறிப்பிட்டு இருக்கும், அவர் என்னுடைய நிறுவனத்தில் மூன்று டெவலப்பர்களை கொண்டு ஏஐ நுட்பத்தை பயன்படுத்தி நாங்கள் ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறோம் இதற்கு முன்பு இதே வேலையை செய்வதற்கு 350 பேர் தேவைப்படுவார்கள் என கூறியிருக்கிறார்.
எல்லா வேலைக்கும் ஆபத்து: ஐந்து ஆண்டு காலம் கூகுள் வணிகப்பிரிவு தலைவராக பணியாற்றியவர் தான் இவர், ஏஐ குறித்து புத்தகம் கூட எழுதியுள்ளார். இந்த பேட்டியில் வீடியோ எடிட்டிங் , பாட்கேஸ்டிங், எக்ஸகியூடிவ் பதவி என அனைத்துமே ஏஐ வசம் சென்று விடும் எனக் கூறியிருக்கிறார் . மருத்துவர்கள் ஆசிரியர்கள் வேலை கூட ஆபத்தில் இருக்கிறது என அவர் கூறியிருக்கிறார்.

சிஇஓ பதவி கூட தப்பாது: அனைத்து பிரிவுகளிலுமே மனிதர்களை விட சிறப்பாக ஏஐ செயல்பட போகிறது தலைமை பதவிகளில் கூட ஏஐ மனிதர்களை விட சிறப்பாக செயல்படும் என தெரிவித்துள்ளார். எந்த திறமையும் இல்லாத தலைமை செயல் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என அவர் கூறியிருக்கிறார் . வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட நம்முடைய வாழ்க்கை முறை மாற வேண்டிய தருணம் வந்துவிட்டது என தெரிவித்திருக்கிறார்.
நம் வாழ்க்கை முறை மாறும்: படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு போக வேண்டும், தினமும் காலையில் தூங்கி எழுந்து அலுவலகம் சென்று வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரவேண்டும் இது தான் வாழ்க்கை என முதலாளித்துவ சமூகம் நம்மை நம்ப வைத்திருக்கிறது. ஆனால் ஏஐ மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்கும் என கூறியுள்ளார். மனிதர்கள் தங்களுடைய குடும்பம் , குழந்தைகள் தங்களுக்கு பிடித்த பழக்கவழக்கங்கள் , நற்பணிகள் உள்ளிட்டவற்றில் இனி அதிக நேரம் ஒதுக்க முடியும் என கூறியிருக்கிறார். மனிதர்கள் வேலை வாய்ப்பை தங்கள் அடையாளமாக கொள்ளாமல் தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications