டப்ளின்: எலான் மஸ்கின் மின்னஞ்சலுக்கு பதிலளிக்காததற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ட்விட்டர் ஊழியருக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க பணியாளர்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கேரி ரூனி என்பவர் முன்பு ட்விட்டர் என அறியப்பட்ட எக்ஸ் வலைதளத்தில் பணி புரிந்தவர்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவர் எலான் மஸ்கின் மின்னஞ்சலுக்கு பதிலளிக்கவில்லை என்ற காரணத்திற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்டார். டப்ளினில் எக்ஸ் நிறுவன தலைமையகத்தில் வேலை செய்து வந்தவர் இவர். எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய பின்னர் அனைத்து ஊழியர்களுக்கும் அவர் சார்பில் மின்னஞ்சல் அனுப்பபப்ட்டது.

அதாவது வேலை அட்டவணையை மிகச் சரியாக பின்பற்ற வேண்டும் இல்லையெனில் ராஜினாமா செய்து விடுங்கள் என எலான் மஸ்க் மின்னஞ்சல் அனுப்பி இருந்ததாக தெரிகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் இந்த மின்னஞ்சலை அனுப்பி உள்ளார்.
அதில் நீண்ட நேரம் மிகத் தீவிரமாக வேலை செய்ய வேண்டும், மிக சிறப்பாக வேலை செய்தவர்களுக்கு மட்டுமே இங்கே வேலை உண்டு மற்றவர்களுக்கு கிடையாது என அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிபந்தனைகளுக்கு எல்லாம் ஆம் என்பதை கிளிக் செய்பவர்கள் நிறுவனத்தில் இருப்பார்கள் கிளிக் செய்யாதவர்கள் வேலையில் இருந்து அனுப்பப்படுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது .
இதனிடையே இந்த மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பவில்லை என்பதால் மூன்று நாட்களுக்குப் பிறகு நிறுவனத்தின் தலைமை மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியிடம் இருந்து வேலையில் இருந்து தானாகவே விலகிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ரூனிக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதனால் கடுப்பாகிய ரூனி எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக அயர்லாந்தின் பணியாளர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆம் என்பதை கிளிக் செய்யாத ஒரே காரணத்திற்காக தான் வேலையில் இருந்து விலக முடிவெடுத்து விட்டதாக கருதி , வேலையில் இருந்து தானாக விலகி விடும்படி மின்னஞ்சல் அனுப்பி உள்ளனர் என தன்னுடைய புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரனை விசாரித்த அயர்லாந்து வொர்க்பிளேஸ் ரிலேஷன் கமிஷன் (Ireland's Workplace Relations Commission (WRC)) எக்ஸ் நிறுவனம் அவருக்கு 5 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. நியாயமற்ற முறையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications