ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற்றப்பட்டதைப் போலவே, உலகின் மிகப்பெரிய ஆன்லைன் டாக்ஸி நிறுவனமாக விளங்கும் உபர் நிறுவனத்தில் அதன் தலைவர் டிராவிஸ் காலாநிக் வெளியேற்றப்பட்டார்.
இதன் பின் சில மாதங்களுக்கு உபர் நிர்வாகக் கூட்டத்திலேயே இருந்தாலும், உபர் நிறுவனத்திற்குப் புதிய சிஇஓ நியமித்துவிட்டு முழுவதுமாக வெளியேறி விட்டார் டிராவிஸ்.
பங்கு விற்பனை
உபர் நிறுவனத்தை விட்டு வெளியேறி டிராவிஸ் நிதிதிரட்ட தன்னிடம் இருந்த உபர் பங்குகளில் 10 சதவீத பங்குகளைச் சாப்ட்பேங்க் நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டு சுமார் 1.4 பில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பெற்றார்.
10100 நிறுவனம்
இந்நிலையில் இந்தத் தொகையைச் சிறப்பான முறையில் முதலீடு செய்யவும் பல நிறுவனங்களில் பல துறையில் பணியாற்ற வேண்டும் என்று புதிதாக 10100 என்ற பெயரில் ஒரு முதலீட்டு நிறுவனத்தைத் துவங்கினார்.
புதிய நிறுவனம்
10100 நிறுவனத்தின் வாயிலாக 150 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டில் சிட்டி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் என்னும் distressed ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஆதிகாரம் செய்யும் அளவிற்கான பங்குகளை வாங்கித் தற்போது மீண்டும் சிஇஓ ஆகியுள்ளார் டிராவிஸ் கலாநிக்.
சிட்டி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ்
இந்நிறுவனம் ரீடைல், பார்கிங், தொழிற்துறை சார்ந்த ரியல் எஸ்டேட் சொத்துக்களை மறுவிற்பனை போன்ற வர்த்தகத்தில் உள்ளது.
10 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ரியல் எஸ்டேட் சொத்துக்கள் முடங்கியுள்ள நிலையில் டிஜிட்டல் வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் இதனை மேம்படுத்த வேண்டும் என டிராவிஸ் தனது பங்கு கைப்பற்றலின் போது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications