ஈரான் அழிக்கப்படும் என டிரம்ப் சொன்ன பின்பும்.. 3 மணிநேரம் மீட்டிங்.. நியூயார்க் நகரில் நடந்தது என்ன?

அமெரிக்கா ஈரான் மத்தியிலான போர் அச்சம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் நேற்று நியூயார்க் நகரில் நடந்த ஐநா பொதுக்கூட்டத்தில் டிரம்ப் பேசிய போது, ஈரான் உடன் நடக்கும் 7 மாத போரை முடிவுக்குக் கொண்டு வர அமைதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை எனில் அந்நாட்டையே அழித்துவிடுவோம் எனப் பேசினார்.

டிரம்ப்-ன் பேச்சுக்குப் பின்பு அமெரிக்கத் தரப்பில் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரான் உயர்மட்ட அதிகாரிகள் உடன் 3 மணிநேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

 ஈரான் அழிக்கப்படும் என டிரம்ப் சொன்ன பின்பும்.. 3 மணிநேரம் மீட்டிங்.. நியூயார்க் நகரில் நடந்தது என்ன?

இந்த கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில் இது மிகவும் சிறப்பான சந்திப்பாக இருந்தது, அமெரிக்காவுக்கு தற்போது வந்துள்ள அதிகாரிகள் போர் குறித்து முடிவுகளை எடுக்கக்கூடிய உயர் அதிகாரிகள் இல்லை.. ஆனாலும் இக்கூட்டத்தில் முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டு உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ஒமான், கத்தார் எனப் பல நாடுகள் அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தை நடத்தச் சூழ்நிலையில் உருவாக்கினாலும் ஈரான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பெரும் தாக்குதலை நடத்தி வந்தது.

Also Read

இந்த நிலையில் பல மாதங்களுக்குப் பின்பு அமெரிக்க அதிகாரிகளும், ஈரான் அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர். நியூயார்க் கூட்டத்திற்கு ஈரான் தரப்பில் அந்நாட்டின் பிரதமர் Masoud Pezeshkian தலைமையிலான குழு சென்றது.

இதேவேளையில் நேற்று ஈரான் வெளியான அறிவிப்பில் ஹார்முஸ் வழித்தடத்தை ஈரான் ராணுவப் படைகள் 7 நாட்களில் திறக்க தயாராக இருப்பதாக ஈரானின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு 2 கண்டிஷன்களை ஈரான் தரப்பில் வைக்கப்பட்டு உள்ளது, முதலில் அமெரிக்கா ராணுவம் ஈரான் துறைமுகத்தின் மீது விதிக்கப்பட்டு உள்ள கடற்படை முடக்கத்தை நீக்க வேண்டும், அடுத்த முக்கியமான கண்டிஷன் பெர்சியன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் வழித்தடத்தில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக குறைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

Recommended For You

இதற்கு முன்பு அமெரிக்க கருவூல அமைப்பின் செயலாளர் ஸ்காட் பெசென்ட், உலகளாவிய விமான நிலையங்கள், நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் ஈரான் விமானங்களுக்கும், ஈரான் விமான நிறுவனங்களுக்கும் எவ்விதமான உதவியும் செய்யக்கூடாது என உத்தரவிட்டு உள்ளார். செப்டம்பர் 23ஆம் தேதிக்கு பின்பு ஈரான் விமானங்களுக்கு ஏதேனும் சேவை அளித்தால் அந்த நாட்டை அமெரிக்காவின் டாலர் நிதி பரிமாற்ற சந்தையில் இருந்து தடை செய்யப்படும் என ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+