சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலம் நம்மால் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர்தான் வாரன பஃபெட். பங்குச்சந்தை முதலீடுகள் என வரும்போது அனைவரும் வாரன் பஃபெட்டின் வழியை தான் பின்பற்றுவார்கள்.
தன்னுடைய முதலீட்டு உத்திகள் மூலம் சரியான நிறுவனங்களை தேர்வு செய்து சரியான நேரத்தில் முதலீடு செய்து தன்னுடைய செல்வத்தை வளர்த்தவர் . தற்போது தன்னுடைய பெர்க்ஸையர் ஹேத்வே நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த கட்டுரையில் பஃபெட்டின் சிறந்த முதலீடுகள் குறித்தும் அவற்றின் மூலம் அவருக்கு கிடைத்த லாபம் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி பிறந்தவர் தான் பஃபெட். சிறுவயதிலிருந்தே இவருக்கு வணிகம், முதலீடு உள்ளிட்டவற்றில் ஆர்வம் அதிகம். One Thousand Ways to Make $1,000 என்ற புத்தகத்தை படித்த பிறகு இதன் மீதான ஆர்வம் இன்னும் அதிகமானது. 1951 ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் முது நிலை படிப்பை முடித்தார்.
பஃபெட்டை பொறுத்தவரை சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ததே அவருடைய சொத்து மதிப்பு உயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த வகையில் அவரின் சிறந்த முதலீடுகளில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் பார்க்கப்படுகிறது. பொதுவாக ஐடி நிறுவன பங்குகளில் இவர் முதலீடு செய்ய மாட்டார். அந்த நிறுவனத்தின் மதிப்பீடுகளை ஆய்வு செய்வது பற்றி தனக்கு முழுமையான புரிதல் இல்லை என கூறி வந்த அவர், 2016 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவன பங்குகளை வாங்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
ஆப்பிள் நிறுவனம் அப்போது நல்ல வளர்ச்சி அடைந்து வந்த காலகட்டம் எனவே வாடிக்கையாளர்களிடம் அதற்கு நன்மதிப்பு இருக்கிறது என்ற காரணத்தை கூறி ஆப்பிள் நிறுவன பங்குகளை 31 பில்லியன் டாலருக்கு வாங்கி வைத்தார். அவருடைய 31 பில்லியன் டாலர் முதலீடு 174 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது .
காப்பீடு துறை வளர்ச்சி அடைந்து வருவதை உணர்ந்த அவர் இரண்டு காப்பீட்டு நிறுவனங்களில் 1967 ஆம் ஆண்டிலேயே முதலீடு செய்தார். National Indemnity and National Fire & Marine ஆகிய இரண்டு காப்பீட்டு நிறுவனங்களிலும் அவர் செய்த முதலீடு 173 பில்லியன் டாலர்களாக வளர்ந்து அவருக்கு பெரிய அளவில் லாபம் பெற்றுத்தந்தது.
அதேபோல அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் , கோகா கோலா, பேங்க் ஆஃப் அமெரிக்கா ஆகிய மூன்று நிறுவனங்களும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சவால்களை எதிர்கொண்டிருந்த காலத்தில் அந்த நிறுவனங்களை நம்பி முதலீடு செய்தார். அவையும் இவருக்கு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபத்தை பெற்று தந்தன.
சீனாவின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டியில்(BYD) 2008 ஆம் ஆண்டிலேயே வாரன் பஃபெட் 232 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தார். தற்போது அதன் மதிப்பு 9 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இதேநவேளையில் அமெரிக்காவில் டெஸ்லாவும் இருந்தது, ஆனால் வாரன் பஃபெட் BYD நிறுவனத்தின் திறன், நிதி நிலையை ஆய்வு செய்து அதன் ஆரம்பக்கட்டத்திலேயே முதலீடு செய்தார். இதுவும் அவருக்கு பல மடங்கு லாபம் தந்துள்ளது.
சர்வதேச அளவிலும் அமெரிக்காவிலும் பங்குச் சந்தையில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகின்றன என்பதை பொறுத்து தன்னுடைய முதலீட்டு உத்தியை மாற்றி அமைத்ததன் மூலம் பங்கு சந்தை முதலீடுகள் வாயிலாகவே பல லட்சம் கோடிகளை வருமானமாக பெற்று உலகப் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார்.
More From GoodReturns

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications