ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையிலேயே இருக்கும் வேளையில், உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக இகுக்கும் ஜி7 நாடுகள், ரஷ்யா மீது கூடுதலான தடைகளை விதிக்க திட்டமிட்டு உள்ளது.
ஏற்கனவே ஒவ்வொரு நாடுகளும் விதிக்கப்பட்ட தடையால் ரஷ்யாவின் வர்த்தகம், நிதி பரிமாற்றம் என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டு உள்ளது ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

ஜி7 நாடுகள் பல்வேறு தடைகளை விதிக்கப்பட்ட பின்பும் தற்போது ரஷ்யா தடை உத்தரவுகளை மீறாத வகையில் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகள் உடன் வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிலையில் புதிய தடைகளை விதித்து ரஷ்யாவை ஒட்டுமொத்தமாக ஒடுக்க திட்டமிட்டு வருகிறது ஜி7 நாடுகள்.
ஜி7 நாடுகள் என்பது பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா ஆகியவை நாடுகளின் கூட்டமைப்பு தான். உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பு என்பதால் இந்த கூட்டமைப்பின் உத்தரவு சர்வதேச வர்த்தகத்தை தலைகீழாக புரட்டிப்போடக்கூடியது.
ஜி7 நாடுகளின் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இந்த வாரம் ஜப்பான் நாட்டில் நடக்க உள்ளது, இந்த கூட்டத்தில் ரஷ்யாவின் எனர்ஜி மற்றும் ஏற்றுமதி பிரிவை குறிவைத்து புதிய தடைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்திற்காக தடைகளும், கட்டுப்பாடுகளும் ரஷ்யா மீது விதிக்கப்படுகிறது.
மே 19-21 ஆம் தேதிகளில் நடக்கும் ஜி7 நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில் ரஷ்யா மீது புதிய தடைகளை விதிப்பதை தாண்டி, தடை உத்தரவுகளை மீறி ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் 3ஆம் தரப்பு நாடுகள் மீது தடை விதிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் ரஷ்யாவின் ராணுவத்திற்கு நிதி உதவி அளிக்கும் அந்நாட்டின் எரிபொருள் துறை பெரிய அளவில் பாதிக்க உள்ளது.

இதோடு ஜி7 நாடுகள் கூட்டத்தில் சில முக்கிய பொருட்களை பட்டியலிட உள்ளது, இந்த பட்டியலில் இருக்கும் பொருட்களை தவிர அனைத்து பொருட்களை சார்ந்த ரஷ்யா உடனான வர்த்தகத்தை தடை செய்யப்பட உள்ளது. இது ரஷ்யாவின் பொருளாதாரத்தை கண்டிப்பாக சீர்குலைக்கும்.
இப்படி பட்டியலிட்டு தடை உத்தரவை விதிக்க அமெரிக்கா கடந்த வருடமே கூறினாலும் ஜி7 நாடுகளை இதை மறுத்தது. தற்போதை தடை உத்தரவில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி அதன் வாயிலாகவே தற்போது ரஷ்யா பல பொருட்களை பல நாடுகளுக்கு விற்பனை செய்தும் இறக்குமதி செய்தும் வருகிறது.


Click it and Unblock the Notifications