ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வட அமெரிக்காவில் 14,700 தொழிற்சாலை மற்றும் வையிட் காலர் ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. மேலும் தங்களது 5 தொழிற்சாலைகளின் கட்டமைப்புகளை மாற்றி அமைக்க உள்ளது என்றும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புகளில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வைட் காலர் ஊழியர்கள்
வைட் காலர் ஊழியர்கள் மட்டும் குறைந்தபட்சம் 8,100 நபர்கள் வெளியேற்றப்பட உள்ளார்கள். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த நிறுவனம் தயாரிக்கும் கார்களை அமெரிக்காவில் விற்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மூடல்
தங்களது தொழிற்சாலைகளை மூட வேண்டும் அல்லது பிற நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட வேண்டும் என்ற நிலைக்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா
இதே போன்ற ஒரு நிலை 2017-ம் ஆண்டு ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் ஏற்பட்டு அதனால் குஜராத்தில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி பாதிப்படைந்து மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் கனடா
அமெரிக்கா மற்றும் கனடாவில் பணிபுரியும் தொழிற்சாலை ஊழியர்களில் 6,000 நபர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். இ ப்படி ஊழியர்களை வெளியேற்றுவதன் மூலம் ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அளவில் செலவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎம் மோட்டார்ஸ்
2018-ம் ஆண்டு இறுதிக்குள் ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 2019-ம் ஆண்டு மிகப் பெரிய கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய உள்ளனர் என்று கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications