ட்ரம்ப் கிட்ட நாம கெஞ்சனுமா? வாய்ப்பே இல்ல ராஜா..! மறுத்த இந்தியா, முறைத்த ட்ரம்ப்..!

டெல்லி: மோடி 2.0 அமைச்சரவையில் மீண்டும் வணிக மற்றும் தொழிற் துறை அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கிறார் பியுஷ் கோயல். அமைச்சராக பொறுப்பேற்ற பின் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் முதல் முறையே கொஞ்சம் பெரிய அணு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

"எக்காரணத்தைக் கொண்டும் அமெரிக்காவிடம் இந்த Generalized System of Preferences வர்த்தகத் திட்டத்தின் கீழ் வழங்கி வந்த இறக்குமதி வரிச் சலுகையை மீண்டும் தரக் கோரி இந்தியா கேட்காது" என நெத்தியில் அடித்துச் சொல்லி இருக்கிறார்.

அதோடு அமெரிக்கா கொடுத்த சலுகையை அவர்களே மீண்டும் எடுத்துக் கொண்டார்கள். அதை இந்தியா முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறது என ஒரு நீண்ட சிக்ஸரையும் அடித்து அமெரிக்காவை நேரடியாக ஒரண்டைக்கு இழுத்திருக்கிறார்.

 நாங்க வளந்துட்டோம்

நாங்க வளந்துட்டோம்

"இந்த Generalized System of Preferences வர்த்தகத் திட்ட ரத்தை எந்த ஒரு இந்திய ஏற்றுமதியாளரும் ஒரு பிரச்னையாகவே பார்க்கவில்லை. ஆனால் இந்த வர்த்தகத் திட்ட ரத்தால் இந்தியாவின் சில துறைகளில் 1 - 2 சதவிகித வியாபாரத்தில் பாதிப்புகள் இருக்கலாம். அதை ஏற்றுக் கொள்கிறோம்" என எல்லாவற்றையும் சாதாரணமாகச் சொல்லி இருக்கிறார். அதோடு "நம்ம அமெரிக்கா நெனைக்கிற மாதிரி எங்க இந்தியா இன்னும் வளந்துக்கிட்டு இருக்குற அல்லது ஏனோ தானோ-ன்னு பேருக்கு வளந்திருக்குற நாடு இல்ல பாத்துக்குங்க" என லைட்டாக உணர்ச்சி வசமும் பட்டிருக்கிறார் பியுஷ் கோயல்.

 ஃபியோ

ஃபியோ

இந்திய ஏற்றுமதி சம்மேளனமான FIEO "அமெரிக்காவின் Generalized System of Preferences வர்த்தகத் திட்டத்தால் அதிக பலன் அடைந்து வந்த நாடு இந்தியா தான். சுமார் 6.35 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு, அமெரிக்காவில் சுமார் 19 மில்லியன் டாலர் இறக்குமதி வரி செலுத்தாமல் வியாபாரம் செய்து வந்தோம்." எனச் சொல்கிறார்கள். அமெரிக்காவில் கூடுதலாக இறக்குமதி வரி செலுத்த வேண்டி இருப்பதால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நகைகள், லெதர், மருந்துகள், ரசாயனங்கள், விவசாயப் பொருட்களின் விலை உயருமாம்.

 ஏன் அச்சம்

ஏன் அச்சம்

இன்று இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா தான். கடந்த 2018 - 19 (ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை மட்டும்) மொத்தம் 296 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்திருக்கிறோம். அதில் சுமார் 15 சதவிகிதம், 47.43 பில்லியன் டாலருக்கு அமெரிக்க நாட்டுக்கு மட்டும் ஏற்றுமதி செய்திருக்கிறோம். அதே போல 2017 - 18 முழு நிதி ஆண்டில் மொத்தம் 303.52 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்திருக்கிறோம். அதில் அமெரிக்காவுக்கு மட்டும் 15.77 சதவிகிதம் (47.87 பில்லியன் டாலருக்கு) ஏற்றுமதி செய்திருக்கிறோம்.

 போனால் காலி தான்

போனால் காலி தான்

இப்படி இந்தியாவின் 15% ஏற்றுமதியைக் கையில் வைத்திருக்கும் அமெரிக்காவோடு பகைத்துக் கொண்டு, சீன பொருட்கள் மீது வரி விதித்தாற் போல இந்தியா மீதும் கூடுதல் வரி விதித்துவிட்டால்,

1. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகாமல் தேங்கி நிற்கும் பொருட்கள் அதிகரிக்கும்.2. திடீரென 15% இந்திய ஏற்றுமதியை அமெரிக்கா தவிர வேறு எந்த நாடாளும் வாங்கிக் கொள்ள முடியாது.3. இந்திய கஜானாவுக்கு வர வேண்டிய அந்நிய செலாவணி வராமல் போகும்.4. இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். இதனால் தான் இந்தியா அமெரிக்கா உடன் கொஞ்சம் பொருமையாக ராஜ தந்திரமாகப் பேச வேண்டி இருக்கிறது. இதர்கு சமீபத்ட்தைய உதாரணம் சீனா.
உதாரணம்

உதாரணம்

அமெரிக்காவுக்கு சந்தையை திறந்து விடவில்லை என்கிற ஓரே காரணத்துக்காக, அமெரிக்கா, சீன பொருட்கள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதித்தது. அமெரிக்காவை பணிய வைக்க சீனாவும், அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தது. இப்படி நேரடியாக சீனாவைப் போல இந்தியா விதிக்க முடியாமல் இருக்கிறது. காரணம் இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா அமெரிக்கா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆக அமெரிக்காவில் இருந்து, இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களில் பெரும்பாலானவைகள் இந்தியாவில் அத்தியாவசியமாக இருக்கிறது. எனவே சீனாவைப் போல நம்மால் தில்லாக திமிரவும் முடியாத நிலையில் பியுஷ் கோயல் அமெரிக்காவை சுரண்டி விட்டிருக்கிறார். சரி இப்போது நமக்குள் சில அடிப்படைக் கேள்விகள் எழுந்திருக்கிறது.

 எழும் கேள்விகள்

எழும் கேள்விகள்

இந்த GSP - Generalized System of Preferences வர்த்தகத் திட்டம் என்றால் என்ன..? இதனால் இந்தியாவுக்கு என்ன நன்மை கிடைத்துக் கொண்டிருந்தது..? இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதால் இந்தியாவுக்கு என்ன நட்டம்..? இனி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் மாற்றம் இருக்குமா..? விரிவாகப் பார்ப்போம்.

 GSP - Generalized System of Preferences

GSP - Generalized System of Preferences

ஜனவரி 01, 1976-ம் ஆண்டு இந்த GSP - Generalized System of Preferences கையெழுத்தானது. இந்த திட்டத்தில் 129 வளரும் நாடுகள் இருந்தன. இந்த 129 நாடுகளில் இருந்து 4,800 பொருட்களை, அமெரிக்க அரசு விதித்திருக்கும் இறக்குமதி வரி செலுத்தாமல், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாம். இது தான் GSP - Generalised System of Preferences.

 ஜிஎஸ்பி கொடுக்கும் நாடுகள்

ஜிஎஸ்பி கொடுக்கும் நாடுகள்

அமெரிக்கா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, பெலாரஸ், கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐஸ்லாந்து, ஜப்பான், கஜகஸ்தான், நியூசிலாந்து, நார்வே, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் இந்த GSP - Generalized System of Preferences திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு இறக்குமதி வரியில் தள்ளுபடி கொடுத்திருக்கிறார்கள். இவர்களை GSP - Generalised System of Preferences Donor என்று அழைக்கிறார்கள்.

 GSP வரலாறு

GSP வரலாறு

General Agreement on Tariffs and Trade (GATT) 1994 பற்றிப் படித்திருப்பீர்கள். இந்த ஒப்பந்தப்படி உலக வர்த்தக அமைப்பில் (WTO) இருக்கும் அனைத்து நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் MFN - Most Favoured Nation ஸ்டேட்டஸ் கொடுத்துக் கொள்ள வேண்டும் என்றது. அதாவது உலகில் உள்ள எல்லா நாடுகளும் எங்களுக்கு பிடித்தமான நாடுகளே. ஆக எந்த பாகுபாடும் இல்லாமல் தங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்வேன் எனச் சொல்வது தான் இந்த Most Favoured Nation ஸ்டேட்டஸ்.

 வளரும் நாடுகளுக்கு

வளரும் நாடுகளுக்கு

மேலே சொன்னது போல Most Favoured Nation பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு உலக வர்த்தக அமைப்பு (WTO) சொல்லும் படி வரிகளை சீராக விதித்து அனைத்து நாடுகளோடு பாரபட்சம் இன்றி நடந்து கொள்ள வேண்டும். இதைத் தாண்டி வளரும் நாடுகளுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு கொடுக்க வேண்டும் என்பதால் இந்தியாவை அமெரிக்காவின் Most Favoured Nation பட்டியலில் இருந்து நீக்கி, GSP - Generalized System of Preferences பட்டியலில் சேர்த்துக் கொண்டது அமெரிக்கா.

 பெரும்பயன்

பெரும்பயன்

பட்டியலிடப்பட்டிருக்கு 129 நாடுகளில் அமெரிக்காவுக்கு 1,900 பொருட்களை ஏற்றுமதி செய்து பெரும் பயனாளியாக இந்தியா இருந்து வந்தது. ஒரு ஆண்டில் சுமார் 6.3 பில்லியன் டாலர் (630 கோடி டாலர்) மதிப்பிலான பொருட்களுக்கு 260 மில்லியன் டாலர் (26 கோடி டாலர்) இறக்குமதி வரி செலுத்தாமல் இன்று வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்தோம். இனி இந்த 26 கோடி டாலரையும் செலுத்த வேண்டும். இந்தியாவுக்கு 1976-ம் ஆண்டில் இருந்து GSP - Generalized System of Preferences வர்த்தகத் திட்டத்தின் கீழ் கொடுத்த வந்த இறக்குமதி வரிச் சலுகையைத் தான் இப்போது திரும்ப பெற்றுக் கொளண்டிருக்கிறது அமெரிக்கா.

 என்ன ஆகும்..?

என்ன ஆகும்..?

இனி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்திருக்கும் இறக்குமதி வரிகளை முழுமையாக, நையா பைசா பாக்கி இல்லாமல் செலுத்தியே ஆக வேண்டும். அப்படிச் செலுத்தினால் தான் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியும். ஒரு இந்தியர் தன் பொருளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார். இந்தியர் பொருளை ஒருவர் அமெரிக்காவில் இறக்குமதி செய்வார். அப்படி இறக்குமதி செய்யும் போது, அமெரிக்க அரசு விதித்திருக்கும் இறக்குமதி வரிகளைச் செலுத்தாமல் இருக்க இந்த GSP - Generalized System of Preferences வர்த்தகத் திட்டம், இடம் கொடுத்தது. இனி இந்தியப் பொருட்களை, அமெரிக்காவில் இறக்குமதி செய்பவர், அமெரிக்க அரசின் இறக்குமதி வரிகளை செலுத்தியே ஆக வேண்டும்.

 ஏன் கோபம்..?

ஏன் கோபம்..?

அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவின் சந்தை இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை என கைகளில் நெட்டி முறித்துக் கொண்டே கோபப்படுகிறார் டிரம்ப். குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ கருவிகள், பால் பொருட்களுக்கு, இந்தியாவில் விதிக்கப்படும் வரிகளை, இதுவரை கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ளவில்லை. அதனால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மிக அதிகமாகவே இருக்கிறதாம். இதனால் இந்தியாவில் மருத்துவ சாதனங்கள் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புபவர்கள், அமெரிக்காவை விடுத்து விலை குறைவாக கொடுக்கும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்கிறார்களாம். இந்த கடுப்பில் தான் அமெரிக்க தன் GSP - Generalized System of Preferences வர்த்தகத் திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்கி இருக்கிறார்கள்.

 எற்றுமதி குறையுமா..?

எற்றுமதி குறையுமா..?

ஆம். இப்போது பொருளின் அடிப்படை விலை, ஏற்றுமதியாளரின் செலவுகள், லாபம் போன்றவைகளை எல்லாம் சேர்த்து இதுவரை 100 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து வந்தார்கள் என்றால் இனி சராசரி இறக்குமதி வரியான 3.3 சதவிகிதத்தையும் சேர்த்து 103.3 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இதனால் கொஞ்சம் வாடிக்கையாளர்கள் இந்தியாவை விட குறைவான விலை கொடுக்கும் நாட்டை நோக்கிப் போகலாம்.

 எப்போதில் இருந்து அமல்

எப்போதில் இருந்து அமல்

இந்த அறிவிப்பு இன்னும் முறையாக இந்தியா அரசுக்கு தெரியப்படுத்தவில்லை. அமெரிக்க அதிபர் அதிகாரபூர்வமாக கையெழுத்து போட்டு இந்தியாவுக்கு தெரியப்படுத்தி 60 நாட்களுக்குப் பின் தான் இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்காவின் இறக்குமதி வரி வசூலிக்கப்படும் எனச் சொல்லி இருந்தார்கள். மார்ச் 2019-ல் இந்தியா உடனான GSP - Generalized System of Preferences வர்த்தகத் திட்டத்தை ரத்து செய்வதாகச் சொல்லி வந்தவர்கள். கடந்த ஏப்ரல் 2019 முதல் வாரத்தில் இந்தியாவுக்கு முறையாகத் தெரியப்படுத்தி இருக்கிறார்களாம். ஆக இப்போது ஜூன் 05, 2019 முதல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் கூடுதல் வரி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாக்கிரதை

ஜாக்கிரதை

அமெரிக்காவுக்கு அடி பணியாமல் இந்தியா நிர்மிந்து நிற்பதைப் படிக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. அதே நேரம், மொத்த இந்தியப் பொருளாதாரமும் சுணங்கி இருக்கும் நேரத்தில் அமெரிக்காவும் நம்முடன் சீனா போல, வர்த்தகப் போர் தொடுத்தால் என்ன செய்வது என்று தான் வருத்தமாக இருக்கிறது. ஆக இந்தியப் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படாமல், சர்வதேச உறவுகள் குறிப்பாக அமெரிக்காவை வம்புக்கு இழுக்காமல், என்ன நல்லது செய்தாலும் வரவேற்கத் தக்கது தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+