முனிச், ஜெர்மனி: ஜெர்மனி நாட்டை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சீமன்ஸ் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
உலக அளவில் பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. அமெரிக்க டெக் நிறுவனங்களின் வரிசையில் தற்போது ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்களும் ஊழியர் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளன. அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சீமன்ஸ் தங்கள் ஊழியர்களில் 6000 பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

சீமன்ஸ் நிறுவனத்தில் டிஜிட்டல் இண்டஸ்ட்ரீஸ் ஆட்டோமேஷன் பிரிவில் பணியாற்றி வந்த 5600 பேரும், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பிசினஸ் பிரிவில் பணியாற்றி வந்த 450 பெரும் வேலை இழக்க உள்ளனர். ஜெர்மனியில் தற்போது சந்தை போக்குகள் மாறி இருப்பதே ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைக்கு காரணம் என சீமன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்கால போட்டியை கருத்தில் கொண்டு வளர்ச்சி அடையக்கூடிய பகுதிகளில் முதலீட்டை அதிகரிக்கவும் தங்கள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சீமன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
உலக அளவில் சீமென்ஸ் நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பிசினஸ் பிரிவில் 1300 பேரை கொண்டிருக்கிறது. இவர்களில் 450 பேர் வேலையை இழக்கின்றனர், இதில் 250 பேர் ஜெர்மனியை சேர்ந்தவர்கள். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த நடவடிக்கைகள் முழுமை பெறும் என சீமன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே சீமன்ஸ் நிறுவனம் தங்களுடைய மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பிஸ்னஸ் பிரிவில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ஏற்படுத்த இருப்பதாக அறிவித்திருந்தது. தற்போது தங்கள் நிறுவனம் பெரிய பேருந்துகளுக்கான சார்ஜிங் கட்டமைப்புகளை கொண்டு வரவும், அதிவேக சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதிலும் கவனம் செலுத்த போவதாக தெரிவித்துள்ளது.
அதேபோல ஆட்டோமேஷன் பிரிவில் சீமன்ஸ் நிறுவனம் தற்போது தேவை குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது. இந்த நிறுவனத்தின் முக்கிய சந்தைகளான சீனா மற்றும் ஜெர்மனியில் போட்டி அதிகரித்திருப்பதால் இந்த பிரிவில் சீமன்ஸ் நிறுவனத்தின் வருமானம் குறைந்துவிட்டது. தங்கள் நிறுவனம் சவால் மிகுந்த கால கட்டத்தில் இருப்பதாக கூறியுள்ளது.
தங்களுடைய டிஜிட்டல் இண்டஸ்ட்ரீஸ் பிரிவில் 68,000 பேர் உலகம் முழுவதும் வேலை செய்வதாகவும் தற்போது 5,600 பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இவர்களில் 2600 பேர் ஜெர்மனியில் பணிபுரிபவர்கள். இந்த பிரிவில் பணி நீக்க நடவடிக்கைகள் 2027 ஆம் ஆண்டுக்குள் முழுமை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சீமன்ஸ் நிறுவனம் 3,13,000 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இதில் 2,27,000 பேர் ஜெர்மனி இல்லாமல் பிற நாடுகளில் பணி புரிந்து வருகின்றனர்.
ஜெர்மனியை சேர்ந்த சீமன்ஸ் industrial automation, drive technology, building technology, energy technology, mobility services, software என பல்வேறு பிரிவுகளில் தொழில் செய்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications