தற்போது இந்தியா சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது மக்களின் உடல் பருமன். உடல் பருமன் அதிகரித்து உடல் பருமனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் இளைய தலைமுறையினர் வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உடல் பருமன் பிரச்சனை இந்தியாவிலும் கூட பெரிய பிரச்சனையாக தான் இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிட்டு மக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் , எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர் . இந்த சூழலில் ஒரு நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு உடல் எடையை குறைத்தால் போனஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

சீனாவை சேர்ந்த இன்ஸ்டா 360 என்ற நிறுவனம் தங்களுடைய ஊழியர்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கொண்டு வருவதற்காக ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது. இதற்காக ஊழியர்களுக்கு உடல் எடை குறைப்பு சவால் என்ற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன்படி ஊழியர்கள் நிறுவனத்தின் உடல் எடை குறைப்பு சவாலில் பங்கேற்பதாக பதிவு செய்துகொள்ளலாம்.
இதனை அடுத்து உடல் எடை குறைக்க வேண்டும் ஒவ்வொரு அரை கிலோ எடை குறைப்புக்கும் 500 யுவான் அதாவது 5 ஆயிரத்து 800 ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்படும். இந்த ஆண்டு 90 நாட்களிலேயே 20 கிலோ உடல் எடை குறைந்து 2.5 லட்சம் ரூபாயை போனஸ் தொகையாக பெற்று வெயிட் லாஸ் சாம்பியன் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார் ஸீ யாகி என்ற ஊழியர்.
ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி , சரிவிகித உணவு ஆகியவையே 90 நாட்களில் தன்னை 20 கிலோ உடல் எடை குறைக்க வைத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார் . தற்பொழுது நான் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன் , அழகாகவும் இருக்கிறேன் என்று கூறியிருக்கும் அவர் என்னுடைய இந்த மாற்றத்திற்கு நிறுவனத்திற்கு தான் நன்றி கூற வேண்டும் என தெரிவித்திருக்கிறார் . இந்த சவால் மூலம் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் ஆரோக்கியமாக இருப்பதையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம் என இன்ஸ்டா 360 நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
உடல் எடை குறைத்தால் போனஸ் என்ற அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது என்றும் கூறுகிறது. ஒருவேளை இந்த போட்டியில் பதிவு செய்துவிட்டு உடல் எடை குறையாமல் மாறாக உடல் எடை ஏறுகிறது என்றால் ஒவ்வொரு அரை கிலோ விற்கும் அவர்கள் 9300 ரூபாயை நிறுவனத்திற்கு அபராதமாக செலுத்த வேண்டும். இதுவரை யாருமே அபராதம் செலுத்தவில்லை என்பதை இந்த போட்டிக்கு கிடைத்த வெற்றி என இந்த நிறுவனம் கூறுகிறது.


Click it and Unblock the Notifications