ஃபேஷன் உலகில் புரட்சியை ஏற்படுத்தி 10 பில்லியன் டாலர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அர்மானி!!

உலகப் புகழ்பெற்ற இத்தாலிய வடிவமைப்பாளர் ஜார்ஜியோ அர்மானி, தனது 91 வயதில் காலமானார். அவரது மரணத்தை அர்மானியின் ஃபேஷன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேர்த்தியான மற்றும் காலத்தால் அழியாத வடிவமைப்புகளின் மூலம் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் அர்மானி.

2025 ஜூன் மாதம் மிலன் ஃபேஷன் ஷோ நிகழ்வில் உடல்நலக் குறைபாடு காரணமாக அர்மானி கலந்துகொள்ளவில்லை. இந்த ஆடை வடிவமைப்பு துறையில் கால் பதித்தது முதலே மிலன் ஷோவை அவர் தவற விட்டது இல்லை. ஆனால் இனி அவர் எந்த ஷோவிலும் கலந்து கொள்ள முடியாத இடத்துக்கு சென்றுவிட்டார்.

ஃபேஷன் உலகில் புரட்சியை ஏற்படுத்தி 10 பில்லியன் டாலர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அர்மானி!!

இந்த மாதம் தனது ஃபேஷன் நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாட ஒரு பெரிய நிகழ்வுக்கு அவர் தயாராகி வந்தார். உடல்நலம் குன்றியபோதிலும், தனது சாம்ராஜ்யத்தின் நேரடிக் கட்டுப்பாட்டை கடைசி வரை தக்கவைத்துக்கொண்டார்.

1934 ஆம் ஆண்டு இத்தாலியின் பியாசென்சாவில் பிறந்த அர்மானி, ஆடை வடிவமைப்பு கடையில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் 1975 ஆம் ஆண்டில் தனது கூட்டாளர் செர்ஜியோ காலியோட்டியுடன் இணைந்து தனது சொந்த ஆடை நிறுவனத்தைத் தொடங்கினார். 1970கள் மற்றும் 1980களின் பிற்பகுதியில் அவரது மென்மையான, ஜாக்கெட்டுகள் உலக ஃபேஷனை மறுவரையறை செய்தன. இது "பவர் சூட்" என்று அழைக்கப்பட்டு, உலக முழுவதும் பலருக்கும் விருப்பமான தயாரிப்பாக மாறியது.

மினிமலிச, மென்மையான மற்றும் நுட்பமான அவரது வடிவமைப்புகள் ஹாலிவுட் நடிகர்கள் முதல் கார்ப்பரேட் நிர்வாகிகள் வரை அனைவரையும் கவர்ந்தன. ரிச்சர்ட் கீர் அமெரிக்கன் ஜிகோலோ (1980) திரைப்படத்தில் அணிந்திருந்த ஆடை, அர்மானியை உலக அளவில் பிரபலமாக்கியது. இது ஹாலிவுட் கலைஞர்களிடையே அவரது ஆடைக்கு பெரும் மதிப்பைப் பெற்றுத் தந்தது. மேலும், 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கான ஆடை வடிவமைப்பாளராகவும், எண்ணற்ற ரெட்-கார்பெட் நிகழ்வுகளிலும் அவரது வடிவமைப்புகள் இடம்பெற்றன.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, அர்மானி 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இதில் ஆடைகள், அணிகலன்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், சாக்லேட்டுகள், பூக்கள் மற்றும் துபாய் மற்றும் மிலனில் உள்ள ஹோட்டல்கள் ஆகியவையும் அடங்கும். அவர் உணவகங்கள், பார்கள் மற்றும் EA7 எம்போரியோ அர்மானி மிலன் கூடைப்பந்து அணியின் உரிமையாளராகவும் இருந்தார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை அவரை உலகின் முதல் 200 பில்லியனர்களில் ஒருவராக அறிவித்தது.

கிங் ஜார்ஜ் என்று அழைக்கப்படும் அர்மானி, நான் உண்மையான மக்களுக்காக வடிவமைக்கிறேன். நடைமுறைக்கு ஒவ்வாத ஆடைகள் மற்றும் அணிகலன்களை உருவாக்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று ஒருமுறை கூறினார். தனது பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், தனது பிராண்ட் சிதையாமல் இருக்கவும் ஒரு அறக்கட்டளையை நிறுவினார்.

அர்மானியின் தாக்கம் ஃபேஷனுக்கு அப்பாலும் விரிந்தது. 2000 ஆம் ஆண்டில், நியூயார்க்கில் உள்ள குகன்ஹெய்ம் அருங்காட்சியகம் அவரது படைப்புகளுக்கு ஒரு கண்காட்சியை நடத்தியது. அவர் எய்ட்ஸ் ஆராய்ச்சி, குழந்தைகள் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவளித்தார். 2002 ஆம் ஆண்டில் அகதிகளுக்கான ஐ.நா நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.திருமணம் செய்து கொள்ளவோ அல்லது குழந்தைகள் பெறவோ இல்லை என்றாலும், அர்மானி தனது குடும்பத்துடன், குறிப்பாக தனது சகோதரியின் மகள் ராபர்ட்டாவுக்கு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வழங்கினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+