மியான்மர் நாட்டில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்த கடை உரிமையாளர்கள் சிறைத் தண்டனை பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் மியான்மரின் ராணுவ அரசாங்கம் செல்போன் கடை நடத்தி வந்த பே போ ஸை ( Pyae Phyo Zaw) என்பவரை சிறையில் அடைத்துள்ளது. தன்னுடைய கடையில் வேலை பார்த்தவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்ததே அவர் செய்த குற்றம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் மூன்று செல்போன் கடைகளை நடத்தி வந்த பே போ ஸை என்பவர் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கியுள்ளார். இதனை அறிந்த அரசு அவரை கைது செய்து மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
மூன்று செல்போன் கடைகளும் மூடப்பட்டு அவர் சிறையில் இருக்கிறார். மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ அரசாங்கம் பல்வேறு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தந்த கடை உரிமையாளர்களை தேடி தேடி மியான்மர் அரசு கைது செய்து வருகிறது. ஸையை போல சுமார் 10 கடை உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கியதற்காக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
மியான்மர் அரசை பொறுத்தமட்டில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதாக மக்களிடையே பரப்புரை செய்து வருகிறது. இந்த சூழலில் கடை உரிமையாளர்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வினை அளித்தால் தங்களுடைய பணவீக்கம் அதிகரிப்பு என்ற பிரச்சாரம் பாதிக்கப்படும் என்றும் கையில் பணவரவு அதிகரித்தால் மக்கள் அரசுக்கு எதிராக போராட தொடங்குவார்கள் அல்லது அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு நிதி உதவி செய்வார்கள் என்றும் ராணுவ தலைமை கருதுகிறதாம்.
எனவே இவ்வாறு ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கூடிய உரிமையாளர்களை மியான்மர் அரசாங்கம் கைது செய்து வருகிறது. அண்மையில் கைது செய்யப்பட்ட ஸையின் கடைக்கு முன்னாள் நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதி நிலைக்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதனிடையே அந்த கடையில் வேலை செய்து வந்தவர்கள் நாட்டில் தற்போது பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துவிட்டது இதனால் எங்களைப் போன்ற சாமானியர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகி வருகிறோம். ஊதிய உயர்வு கிடைத்ததே என சந்தோஷப்பட்டோம் ஆனால் தற்போது அரசின் செயல்பாட்டால் எங்களது வேலையை பறிபோய் விட்டது என கூறுகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மர் ஆட்சியானது அகற்றப்பட்டு ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இதனை அடுத்து அந்த நாட்டில் பயங்கர பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications