பிராண்ட் மதிப்பில் கூகிள் நிறுவனத்தை அடிச்சிக முடியாது..!

உலக நாடுகளில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனது வர்த்தகம், வளர்ச்சி, வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைக்கும் நற்பெயர், எனப் பல காரணிகளைக் கொண்டு ஒரு நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு மதிப்பிடப்படும்.

உலக நாடுகளில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனது வர்த்தகம், வளர்ச்சி, வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைக்கும் நற்பெயர், எனப் பல காரணிகளைக் கொண்டு ஒரு நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு மதிப்பிடப்படும்.

சர்வதேச சந்தைகளில் இருக்கும் அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்து வெளியிட்டு வரும் பிராண்டு பைனான்ஸ் நிறுவனம் 2017ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

சரி இந்த வரும் எந்தெந்த நாட்டு நிறுவனங்கள் பிராண்ட் மதிப்பில் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். ஆனால் இந்த வருடம் பல சுவாரஸ்யமான மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளது.

கூகிள்

கூகிள்

2017ஆம் ஆண்டுக்கான உலகப் பிராண்ட் பட்டியலில் உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கூகிள் நிறுவனம் 1,09,470 மில்லியன் டாலர் மதிப்பீட்டுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த வருடம் இப்பட்டியலில் 2வது இடத்தில் இருந்த கூகிள் 2017இல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அப்போ முதல் இடத்தை இழந்த நிறுவனம் எது..?

 

 ஆப்பிள்

ஆப்பிள்

ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் டிஜிட்டல் உலகையே மாற்றி அமைத்ததில் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் அடித்தளமாக அமைந்தது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்றால் மிகையாகாது. 2016ஆம் ஆண்டுப் பட்டியிலில் முதல் இடத்தில் இருந்த ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் 7 ஆகியவற்றின் விற்பனை குறைந்த காரணத்தால் ஆப்பிள் நிறுவனம் 2017இல் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 1,07,141 மில்லியன் டாலர்.

 

அடித்தது யோகம்

அடித்தது யோகம்

உலகளவில் மென்பொருள் மற்றும் ஈகாமர்ஸ் சேவையை அளிக்கும் அமேசான் நிறுவனம், இந்திய சந்தையில் சிறப்பான வர்த்தகம், கிளவுட் சேவையில் எப்போதும் இல்லாத அளவிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விடவும் மிகப்பெரிய வளர்ச்சி என அமேசான் நிறுவனத்திற்கு 2016 மிகவும் சிறப்பாக அமைந்தது.

இதன் எதிரொலியாகக் கடந்த வருடத்தைப் போலவை இந்த வருடமும் அமேசான் நிறுவனம் 3வது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 1,06,396 மில்லியன் டாலர்.

 

ஏடி அண்ட் டி

ஏடி அண்ட் டி

அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் டெலிகாம் சேவை நிறுவனமான ஏடி அண்ட் டி பிராண்டு பைனான்ஸ் செய்த ஆய்வில் இதன் பிராண்ட் மதிப்பு 87,016 மில்லியன் டாலர் மதிப்புடன் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

2016ஆம் ஆண்டில் 4வது இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் 2016ஆம் ஆண்டில் பல முக்கிய நிறுவனங்களைக் கைப்பற்றி நீண்ட கால வளர்ச்சியை நோக்கிச் செல்ல துவங்கியுள்ள நிலையில் இந்த வருடம் 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 76,265 மில்லியன் டாலராக உள்ளது.

 

சாம்சங் குரூப்

சாம்சங் குரூப்

மொபைல் மற்றும் ராணுவ ஆயுத தயாப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனம் 7வது இடத்தில் இருந்து 6 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 66,219 மில்லியன் டாலராக உள்ளது.

 

வெரிசோன்

வெரிசோன்

அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்டு செயல்படும் வெரிசோன் யாஹூ நிறுவனத்தைக் கைப்பற்றிய பின் இதன் வர்த்தகச் சூழ்நிலை சற்று மாறியுள்ளது. இதனால் இந்நிறுவனம் 7வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 65,875 மில்லியன் டாலராக உள்ளது.

 

வால்மார்ட்

வால்மார்ட்

சில்லறை வர்த்தகத்தில் உலகம் முழுவதும் கொடிகட்டி பறக்கும் வால்மார்ட் 2017ஆம் ஆண்டில் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 62,211 மில்லியன் டாலராக உள்ளது.

 

பேஸ்புக்

பேஸ்புக்

2016ஆம் ஆண்டின் ஆய்வில் 17வது இடத்தில் இருந்த பேஸ்புக் 2017ஆம் ஆண்டில் 9வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 61,998 மில்லியன் டாலராக உள்ளது.

 

ஐசிபிசி

ஐசிபிசி

சீனாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐசிபிசி வங்கி 2017ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 47,832 மில்லியன் டாலராக உள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+