உற்பத்தியை குறைக்க 'ரஷ்யா' ஒப்புதல்.. கச்சா எண்ணெய் விலையில் திடீர் உயர்வு..!

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க OPEC அமைப்புடன் ரஷ்யா இணைந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலையில் திடீர் உயர்வு.

உலகச் சந்தையில் அளவிற்கு அதிகமாக இருக்கும் கச்சா எண்ணெய் இருப்பின் காரணமாக அதன் விலை தொடர்ந்து சரிந்த வண்ணமாகவே இருந்த நிலையில் இதன் விலை சரிவை கட்டுப்படுத்தவும், அதன் விலையை அதிகரிக்கும் முயற்சியாகச் சில வாரங்களுக்கு முன்பு OPEC அமைப்பு தனது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்தது.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி அமைப்பான OPEC அமைப்பில் இருக்கும் 13 நாடுகளும், இவ்வமைப்பில் இல்லாத ரஷ்யா போன்ற உற்பத்தி நாடுகளும், OPEC அமைப்பின் முடிவுக்கு ஒத்துழைப்பு அளித்துத் தங்களது உற்பத்தி அளவுகளைக் குறைக்கத் தற்போது முடிவு செய்துள்ளது.

இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் கச்சா எண்ணெய்யின் விலை 4 சதவீதம் உயர்ந்து 57.89 டாலராக உயர்ந்தது. இது ஜூலை 2015ஆம் ஆண்டுக்குப் பின் அதிகப்படியான விலையாகும்.

கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள்

கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள்

கடந்த ஒரு வருடமாக OPEC அமைப்பிற்கு உள்ளேயே கச்சா எண்ணெய்யை குறைக்கப் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், பலன் அளிக்கவில்லை. ஆனால் சில வாரங்களுக்கு முன் நடத்தக் கூட்டத்தில் கச்சா எண்ணெய் விலை சரிவால் OPEC அமைப்பில் இருக்கும் நாடுகளின் வர்த்தகம் மட்டும் அல்லாமல் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்ட கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் OPEC அமைப்பு ஒப்புக்கொண்டது.

 

ரஷ்யா

ரஷ்யா

இந்நிலையில் OPEC அமைப்பைத் தாண்டி உலகளவில் அதிகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ரஷ்யா. கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது என்பதை உறுதி செய்த நிலையில் OPEC அமைப்பு ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன் வாயிலாக ரஷ்யாவும் உற்பத்தியைக் குறைக்க ஒப்புக்கொண்டது.

 

24 நாடுகள்

24 நாடுகள்

உலகில் 54 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு இருக்கும் இந்த 24 நாடுகளின் தற்போதைய உற்பத்தி அளவு 52.6 மில்லியன் பேரல்.

இப்புதிய ஒப்புதல்கள் படி 24 நாடுகள் இணைந்து ஒரு நாளுக்குச் சுமார் 1.76 மில்லியன் பேரலை குறைக்க முடிவு செய்துள்ளது.

 

டெலிவரி அளவுகள் குறையும்

டெலிவரி அளவுகள் குறையும்

மேலும் சவுதியின் முக்கிய எண்ணெய் உற்பத்தி விநியோக நிறுவனமான Aramco ஜனவரி 2017 முதல் தனது வாடிக்கையாளர்களுக்கு விநியோக அளவு குறைக்கப்படும் எனக் கூறியுள்ளது.

விலை உயர்வு..!

விலை உயர்வு..!

இதன் வாயிலாகத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+