உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மன் சாக்ஸ், தனது ஊழியர்களுக்கு இந்த ஆண்டு முடியும் வரையில் பணிநீக்கங்கள் மற்றும் புதிய நியமனங்களை குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவல் படி கோல்ட்மன் சாக்ஸ் வெளியிட்டுள்ள நிறுவனத்தின் இன்டர்னல் மெமோவில, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தித்திறனை உயர்த்தும் "ஓன் ஜிஎஸ் 3.0" திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது என தெரிகிறது.
ஏற்கனவே டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வரும் வேளையில் தற்போது முதலீட்டு வங்கிகளும் பணிநீக்கம் செய்வதில் இறங்கியுள்ளது, இதேபோல் கடந்த 2-3 ஆண்டுகளகவே முதலீட்டு வங்கி துறையில் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதன் வெளிப்பாடாகவே தற்போது கோல்ட்மன் சாக்ஸ் பணிநீக்கம் செய்யும் முடிவை அறிவித்துள்ளது.

இன்று வெளியான அறிவிப்பின் படி அமேசான், தனது HR பிரிவில் 15 சதவீத ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் மனிதவளத் துறையான பீப்பிள் எக்ஸ்பீரியன்ஸ் டெக்னாலஜி (PXT) பிரிவு இந்த பணிநீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இத்தகைய சூழ்நிலையில் கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தின் பணிநீக்கம் அதன் ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பதை தாண்டி அதன் உள் நிர்வாக செயல்பாடுகளை மறுசீரமைக்கும் பெரிய முயற்சியின் தொடக்கமாக இருக்கப்போகிறது. வால்ஸ்ட்ரீட்-ல் இது ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் இனி வரும் காலத்தில் முதலீட்டு முடிவுகள், முதலீட்டு ஆய்வுகள் அனைத்தும் ஏஐ சார்ந்து இருக்கப்போகிறது திட்டவட்டமாக தெரிகிறது.
Goldman Sachs நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரர் டேவிட் சாலமன், அதன் தலைவர் ஜான் வால்ட்ரான் மற்றும் நிதி அதிகாரர் டெனிஸ் கோலமன் ஆகியோர் கையெழுத்திட்ட மெமோ-வில் "ஓன் ஜிஎஸ் 3.0" எனும் ஏஐ அடிப்படையிலான உத்தியை முக்கியமானதாக விளக்குகிறது என இந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஓன் ஜிஎஸ் 3.0 சேவைகள் முதல் கட்டமாக வாடிக்கையாளர் மேலாண்மை, விற்பனை செயல்முறைகள், வாடிக்கையாளர் ஈர்ப்பு போன்றவற்றில் அதிகளவில் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் செயல்பாடுகளை வேகப்படுத்தி, தவறுகளைக் குறைத்து, செலவுகளை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கோல்டுமேன் சாக்ஸ்.
கோல்ட்மன் சாக்ஸ் ஏற்கனவே "ஜிஎஸ் ஏஐ அசிஸ்டன்ட்" எனும் உள் சாட்ஜிபிடி போன்ற கருவியை உருவாக்கி, பல ஊழியர்களின் வேலையை எளிதாக்கி வருகிறது. இந்த முயற்சிகள் அனைத்தும் நீண்டகால அடிப்படையில் லாபத்தை தரும்.
ஒவ்வொரு ஆண்டும் கோல்ட்மன் சாக்ஸ் இத்தகைய பணிநீக்கத்தை செய்யும், ஆனால் இது அமெரிக்க நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் தான் நடைபெறும். ஆனால் ஏஐ மீதான நம்பிக்கையின் காரணமாகவும், முதலீட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாகவும் இந்த ஆண்டு செப்டம்பர் முன்பே ஊழியர் குறைப்பை நடத்தி வருகிறது. இத்தகைய வருடாந்திர பணிநீக்க செயல்முறையில், ஊழியர்கள் செயல்திறனின் அடிப்படையில் 3 முதல் 5 சதவீதம் பேர் குறைக்கப்படுவார்கள்
செப்டம்பர் இறுதியில், நிறுவனத்தின் உலகளாவிய ஊழியர் எண்ணிக்கை 48,300-ஆக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டின் ஒப்பீட்டில் 1,800-ஆல் அதிகம். இந்த பணிநீக்கத்திற்கு பின் டிசம்பர் 2025ல் இந்நிறுவனத்தின் முழு விபரம் வெளியாகும்.


Click it and Unblock the Notifications