அமெரிக்கா பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாக சர்வதேச நிதி மற்றும் தரகு நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் (Goldman Sachs) கணிப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் குறித்த தன்னுடைய பார்வையை கோல்டுமேன் சாக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு முன்பை விட பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

அடுத்த 12 மாதங்களுக்குள் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு 35 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கு முன்பு கோல்டுமேன் சாக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு 20 சதவீதமாகத் தான் இருந்தது. தற்போது அதனை 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. பல்வேறு தொழில்களும், வாடிக்கையாளர்களும் அமெரிக்க பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
பல்வேறு நாடுகளின் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை முன்பை விட பல மடங்கு உயர்த்திருக்கிறது டிரம்ப் நிர்வாகம். அடுத்து வரும் நாட்களிலும் வரி உயர்வு குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை நாம் எதிர்பார்க்க முடியும். இப்படிப்பட்ட சூழலில் தான் கோல்டுமேன் சாக்ஸ் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உயர்ந்துள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பொருளாதாரத்தின் அடித்தளம் முன்பை போல வலுவாக இல்லை என தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறது. மேலும் உண்மையான வருமான வருவாய் வளர்ச்சி என்பது வெறும் 1.4% ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் இறக்குமதி வரி வருவாய் 15 சதவீதமாக அதிகரிக்கும் இருந்தாலும் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்துவதன் மூலம் அமெரிக்க பண வீக்கம் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கையும் எடுத்துள்ளது.
2025 ஆம் ஆண்டுகள் அமெரிக்காவில் பணவீக்கம் 3.5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியே இரண்டு சதவீதமாகத் தான் பணவீக்கம் இருக்கும் என நிர்ணயம் செய்துள்ளது ஆனால் இந்த அறிக்கை அதைவிட சற்றே அதிகமாக பணவீக்கம் உயரும் என கூறியுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டு அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதமாக இருக்கும் என முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்த இந்த நிறுவனம் தற்போது அதனை 1 சதவீதமாக குறைத்து விட்டது.
அமெரிக்காவில் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.5% உயரும் என்றும் பொருளாதாரம் மந்தமடைவது நாட்டையே அசைத்துப் பார்க்கும் என்றும் கூறுகிறது. கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் தான் தன்னுடைய பொருளாதார கொள்கைகளை டிரம்ப் நிர்வாகம் செயல்படுத்த வேண்டி இருக்கும் என்றும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications