ரூ.6,500 கோடி கொடுத்து எச்டிசி ஊழியர்களை வாங்க முடிவு.. புதிய திட்டத்தில் இறங்கும் கூகுள்!

கூகுள் நிறுவனம் எச்டிசி மொபைல் கார்ப்ரேஷனின் பொறியியல் மற்றும் வடிவமைப்பு குழுவை 1.1 பில்லியன் டாலர் கொடுத்து வங்க முடிவு செய்துள்ளது.

எச்டிசி நிறுவன ஊழியர்களை வாங்குவதன் மூலம் அமெரிக்க இணையதள நிறுவனமான கூகுள் வன்பொருள் துறையிலும் அகலக் கால் வைக்க முடிவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

எந்தப் பிரிவு ஊழியர்களைக் கூகுள் வாங்குகின்றது?

எந்தப் பிரிவு ஊழியர்களைக் கூகுள் வாங்குகின்றது?

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ப்பாபெட் எச்டிசி ஊழியர்களில் யாரெல்லாம் பிக்செல் ஸ்மார்ட்போன் தயாரிப்புப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்களோ அவர்களை எல்லாம் வாங்குவதற்கான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.

என்ன முடிவு?

என்ன முடிவு?

இந்தப் பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலவரப்படி வங்கப்பட இருக்கும் ஊழியர்கள் எச்டிசி நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் கீழ் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்வார்கள் என்று கூறப்படுகின்றது.

எதனால் கூகுள் இந்தக் கையகப்படுத்தலை செய்கின்றது?

எதனால் கூகுள் இந்தக் கையகப்படுத்தலை செய்கின்றது?

கூகுள் நிறுவனத்திற்குப் பிக்செல் ஸ்மார்ட்போன் மற்றும் பிற சாதன பிரிவில் விற்பனை அதிகரித்துள்ளது. அவை கூகுள் நிறுவனத்தின் தூண்களாக உருவாக வாய்ப்புள்ளதால் ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாகத் தன்னிடம் உள்ள வாய்ஸ் எனேபல்டு அசிஸ்டென்ட் மென்பொருள் போன்றவற்றையும் எளிதாக விநியோகிக்க முடியும் என்று திட்டம் தீட்டியுள்ளது.

கூகுளின் அடுத்தத் திட்டம்

கூகுளின் அடுத்தத் திட்டம்

மேலும் தேடல் நிறுவனமான கூகுள் இரண்டாம் தலைமுறை சாதனங்களை அக்டோபர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் கூகுள் நிறுவனம் பல திட்டங்களை வகுத்து வருகின்றது.

எச்டிசி நிறுவனத்தில் இருந்து கூகுளில் வேலை செய்ய இருக்கும் குழுவானது வன்பொருள் பிரிவில் கவனம் செலுத்தும். இந்தக் குழு ஏற்கனவே பிக்செல் ஸ்மார்ட்போன் பிரிவில் வேலை செய்துள்ளதால் அடுத்து கூகுள் என்ன செய்யப்போகின்றது என்று ஆர்வம் எழத் துவங்கியுள்ளது.

 

 எச்டிசி

எச்டிசி

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்குப் போட்டியாக ஒரு நேரத்தில் ஸ்மார்ட்போன் தயாரித்து வந்த எச்டிசி நிறுவனம் போட்டியாக இருந்த நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் சீன நிறுவனங்களான ஹூவாய் போன்றவற்றையும் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றது.

தற்போது தங்களது வணிகத்தை மேலும் அதிகரிக்க மற்றும் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்யக் கூகுள் மட்டும் இல்லாமல் தங்களது ஆலோசகர்களுடன் எசிடிசி நிர்வாகம் விவாதித்து வருகின்றது.

 

 ராசி இல்லா கூகுள்

ராசி இல்லா கூகுள்

கூகுள் நிறுவனத்திற்கு வன்பொருள் பிரிவில் ராசி இல்லை என்று கூறலாம்.2012-ம் ஆண்டு 12.5 பில்லியன் கொடுத்து மோட்டரோலா மற்றும் ஆண்டிராய்டு போன் உற்பத்தியாளர்களையும் வாங்கிய கூகுள் சில ஆண்டுகளில் லெனேவா நிறுவனத்திற்கு வெறும் 3 பில்லியன் டாலருக்கு விற்று நாட்டத்தைச் சந்தித்தது.

ஏன் எச்டிசி நிறுவனத்தைக் கூகுள் வாங்காது?

ஏன் எச்டிசி நிறுவனத்தைக் கூகுள் வாங்காது?

எச்டிசி நிறுவனத்தினை வாங்குவது குறைவான செலவு அல்ல. இதனைப் பார்க்கும் போது எச்டிசி நிறுவனத்தினை முழுமையாகக் கூகுள் நிறுவனம் வாங்க முயன்றால் அது அவர்களின் வருவாய் அளவைப் பெறும் அளவில் பாதிக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

எச்டிசி ஊழியர்களை ஏன் கூகுள் வாங்க வேண்டும்?

எச்டிசி ஊழியர்களை ஏன் கூகுள் வாங்க வேண்டும்?

ஸ்மார்ட்போன் துறையில் தங்களது ஆதிக்கத்தினைச் செலுத்தினால் ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்குத் தங்களது மெபொருள்களை நிறுவ பணம் அளிப்பது குறையும், அதனால் பிக்செல், நெக்சஸ் உள்ளிட்ட போன்களை அறிமுகம் செய்து பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் வரவேற்பை அடுத்து கூகுள் நிறுவனம் தங்களது அடுத்த அடியை கவனமாக எடுத்து வைக்க நினைக்கும் முடிவே எசிடிசி நிறுவனத்தின் ஊழியர்களின் சில பிரிவுகளை வாங்குவது என்று கூறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+