செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் படிப்படியாக தன்னுடைய ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே ஏஐ தொழில்நுட்பத்தை நாம் பரவலாக பயன்படுத்த தொடங்கி விட்டோம். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் இண்டர்வியூவ் காட்சியில் செய்யப்பட்ட டப்பிங் பெரிய அளவில் மக்களால் பேசப்பட்டது. ஆனால் இன்றைய ஏஐ காலத்தில் இதை மிகவும் எளிதாகவும், அனைவராலும் செய்ய முடியும் சூழல் உருவாகியுள்ளது. இது அனைத்து நிறுவனங்களும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
ஏஐ கொடுக்கும் புது பிரச்சினை: கூகுள், அமேசான் உள்ளிட்ட பெரிய டெக் நிறுவனங்கள் எல்லாம் தங்களுடைய நிறுவனங்களில் கோடிங் உள்ளிட்ட பணிகளை ஏஐ தொழில்நுட்பத்திடம் வழங்கி வருகின்றன. இந்த தொழில்நுட்பமே தற்போது கூகுள் உள்ளிட்ட பெரிய டெக் நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாகவும் உருவெடுத்து இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் தங்களுடைய பணிகளுக்கு ஆட்களை வேலைக்கு தேர்வு செய்ய ஆன்லைன் முறையில் நேர்காணல்களை நடத்துகின்றன.

ஆன்லைன் நேர்காணல்களில் மோசடி: ஆன்லைன் நேர்காணல்களின் போது பல்வேறு பொறியாளர்களும் ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நேர்காணலில் வெற்றி பெற்று விடுவதாகவும் வேலைக்கு வரும்போது நேர்காணலில் காண்பித்த திறமைகள் அவர்களிடம் இருப்பதில்லை என்பதும் தற்போது இந்த நிறுவனங்களுக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. எனவே கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, இனி தங்கள் நிறுவனத்தில் இன்ஜினியர்கள் மற்றும் ப்ரோகிராமிங் பணிகளுக்கு ஆட்களை வேலைக்கு தேர்வு செய்யும்போது நேரடியாக அவர்களை அழைத்து நேர்காணல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
நேரடியாக மட்டுமே நேர்காணல்: கடந்த சில மாதங்களாக கூகுள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களை கூட நேரடியாக அழைத்து அவர்களின் தலைமை அதிகாரிகளை கொண்டு ஒரு முறை நேர்காணல் நடத்தும் அளவிற்கு நிலைமை மோசமடைந்திருக்கிறதாம். ஆன்லைன் முறையில் நேர்காணல் நடத்தும்போது பல்வேறு நபர்களும் நவீன கருவிகளை பயன்படுத்தி கேமராவை ஆன் மோடில் இருப்பதைப் போலவே வைத்து ஏஐ கருவிகள் வாயிலாக கோடிங் ,கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிதாக பதில் அளித்து வருகிறார்களாம். எனவே அந்த நபர் உண்மையாகவே திறமையான நபரா என்பதை கண்டுபிடிக்க முடியாமல் பெரிய டெக் நிறுவனங்கள் தற்போது தவித்து வருகின்றன .

சுந்தர் பிச்சை அறிவிப்பு: இதன் காரணமாகவே அனைத்து விதமான பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான பதவிகளுக்கு இனி நேரடியாக மட்டுமே நேர்காணல் நடத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்திருக்கிறது. கூகுளில் வேலைக்கு சேர வேண்டும் என விண்ணப்பம் செய்பவர்களுக்கு குறைந்தது ஒரு நேர்காணலாவது அவர்கள் நேரில் வந்து கலந்து கொள்ளும்படி இருக்கும் அது முக்கியமான ஒரு நேர்காணலாக இருக்கும் என சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.
டெக் நிறுவனங்கள் : எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேரக்கூடிய நபர்களுக்கு கணினி அறிவியல் தொடர்பான அடிப்படை புரிதல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வருவதாக அவர் கூறியிருக்கிறார். கூகுள் நிறுவனம் மட்டுமல்ல அமேசான், சிஸ்கோ, டெலாய்ட் , மெக்கன்சி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆன்லைன் நேர்காணல் முறையை கைவிட்டு நேரடியாக மட்டுமே நேர்காணல்களை நடத்த தொடங்கிவிட்டன.
அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆன்லைன் நேர்காணல்களில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமான நபர்கள் ஏஐ கருவிகளைக் கொண்டு மோசடியாக வேலை வாய்ப்பு பெறுவதாக தெரிவிக்கிறது .
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications