மனிதனை போன்று சிந்தித்து செயல்படும் டியூப்ளக்ஸ்.. கால் செண்டர் ஊழியர்களுக்கு பாதிப்பா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை மனிதன் போன்றே பேசும் டியூப்ளக்ஸ் செயற்கை நுண்ணறிவு திட்டத்தினை அன்மையில் நடைபெற்ற I/O மாநாட்டில் அறிமுகம் செய்து இருந்தார். இந்த டியூப்ளக்ஸினால் கால் செண்டர் எனப்படும் வாடிக்கையாளர் சேவை மைய வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அச்சம் ஏற்பட்டது.

பிபிஓ ஊழியர்களின் இந்த அச்சம் அதிகரிக்கும் முன்பே கூகுள் நிறுவனம் டியூப்ளக்ஸ் திட்டத்தினால் கால் செண்டர் வேலைகளுக்கு எந்த பாதிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளது.

அச்சம்
 

அச்சம்

கூகுளின் டியூப்ளக்ஸ் திட்டம் முழுமையாகச் செயல்பட துவங்கும் போது லட்சம் கணக்கான கால் செண்டர் வேலைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சில நாட்களாக அச்ச நிலவி வந்தது. அதே நேரம் இந்த திட்டத்திற்கு பெரிய அளவில் வரவேற்பும் உள்ளது.

கூகுள்

கூகுள்

கூகுள் டியூப்ளக்ஸ் சேவையானது தனிநபர்களுக்குத் தேவையான உதவிகளைத் தான் அளிக்கும் என்றும் நிறுவனங்களின் சேவைகளுக்கு ஏற்றவாறு இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.

சோதனை

சோதனை

கூகுள் நிறுவனத்தின் டியூப்ளக்ஸ் தொழில்னுட்பத்தினை நிறுவன வாடிக்கையாளர்களுக்காக சோதனை செய்யப்படவில்லை என்றும், ரெஸ்டாரண்ட் புக் செய்வது, சலூன் சேவை புக் செய்வது மற்றும் விடுமுறை திட்டங்கள் என சில நம்பிக்கையானவற்றுக்கு மட்டுமே தற்போது டியூப்ளக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

கூகுள் டியூப்ளக்ஸ்

கூகுள் டியூப்ளக்ஸ் தொழில்நுட்பம் மனிதர்களைப் போன்றே ஆஹ், உம் என எப்படி செயல்படும் என்று சுந்தர் பிச்சை இயக்கிக் காட்டு வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.. அந்த வீடியோ இங்கே பாருங்கள்.

விவாதங்கள்
 

விவாதங்கள்

இதனை வைத்து நிறுவனங்கள் ஊழியர்களை வைத்து தான் வேலை செய்கிறோம் என்று ஏமாற்றக் கூடும், அரசியல் கட்சிகள் இந்த சேவையினை பயன்படுத்தி தங்களது வாக்காளர்களை சமாதானப்படுத்தி ஓட்டு வாங்கப் பயன்படுத்த முடியும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google confirms its human sounding Duplex AI won't take away call center jobs

Google confirms its human sounding Duplex AI won't take away call center jobs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X