சுந்தர் பிச்சை அணியில் சேரும் பேஸ்புக் மைக்கெல்.. யார் இவர்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

13 வயதில் யூடியூப் வீடியோ மூலம் மொபைல் செயலி உருவாக்குவதை கற்றுக்கொண்ட மைக்கெல் சேமேன், தனது 17 வயதில் பேஸ்புக் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப்-பில் சேர்ந்தார்.

 

அடுத்த ஒரு வருடத்திலேயே ஆதாவது 18 வயதிலேயே பேஸ்புக் நிறுவனத்தில் முழுநேர இன்ஜினியராக பணியாற்றினார். இவர்தான் இந்நிறுவனத்திலேயே இளம் பொறியியலாளர். இப்படி பேஸ்புக்கில் பல பதவிகள், பல முக்கிய பணிகளில் பணியாற்றி வரும் மைகெல் தற்போது கூகிள் நிறுவனத்தில் சேர உள்ளார்.

அதுவும் சந்தர் பிச்சையின் முக்கிய திட்டத்தின் குழுவில் சேர உள்ளார்.

இயல்பு..

இயல்பு..

பொதுவாக கூகிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட், ஆப்பிள் நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களுக்கு வெளி நிறுவனங்களில் அதிகமான வாய்ப்புகள் இருப்பதை விடவும் இந்த 4 நிறுவனங்களில் ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளது. காரணம் போட்டி.

இந்த 4 நிறுவனங்களும் வெவ்வேறு துறையில் பணியாற்றினாலும், ஏதேனும் ஒரு பிரிவு அல்லது பிராடெக்ட்-இல் போட்டி போட்டு வருகிறது. இந்த போட்டியை சமாளிக்க புதிய கண்டுப்பிடிப்புகளை கொண்டு வருவதை விடவும், பிற நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களை தனது நிறுவனத்தின் அமர்த்தி, இருக்கும் திட்டத்தை மேம்படுத்துவதை முக்கிய பணியாக வைத்துள்ளது.

இதனால் இந்த 4 நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களுக்கு எப்போதுமே கிராக்கி தான்.

 

இதில் ஒருவர்..

இதில் ஒருவர்..

இப்படி பிரபலம் அடைந்தவர் தான் இந்த மைக்கெல் சேமேன்.

தற்போது 21 வயதாகும் மைக்கெல், பேஸ்புக் நிறுவன்ததின் பிராடெக்ட் மேனேஜராக இருக்கிறார். இவர் வேலை என்னவென்றால், இன்றைய தலைமுறையினர் எப்படி ஸ்மார்ட்போனை பயன்படுத்திகிறார்கள், இதனை கொண்டு இளைஞர்களை கவரும் வகையில் எப்படிபட்ட பிராடெக்ட்டை உருவாக்குவது, மேலும் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் இன்றைய டிரென்ட் ஆகியவற்றை ஆய்வு செய்வதே மைக்கெல்-இன் பணி.

 

கூகிள் மாற்றம்...
 

கூகிள் மாற்றம்...

இப்படி முக்கியமான பதவியில் இருந்தும், பேஸ்புக் நிறுவனத்தில் wunderkind என்ற பெயரை பெற்ற மைக்கெல் தற்போது கூகிள் நிறுவனத்தில் சேர உள்ளார்.

இது அமெரிக்க சிலிக்கான் வேலி மற்றும் டெக்னாலஜி சந்தையில் முக்கிய செய்தியாக இடம்பெற்றுள்ளது.

 

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

கூகிள் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சந்தர் பிச்சையின் முக்கிய திட்டமாக இருக்கும் Assistant சேவை, தற்போது சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது மட்டுமல்லாமல் அமேசான் அலெக்ஸா மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சிரி ஆகியவற்றுக்கு மிகப்பெரிய போட்டியாக உள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெற சந்தர் பிச்சை கூகிள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளிலும் இதனை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார்.

 

அணியில் வாய்ப்பு

அணியில் வாய்ப்பு

கூகிளின் Assistant சேவையை மேம்படுத்தும் சுந்தர் பிச்சையின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் அணியில் தான் தற்போது மைக்கெல் சேமேன் சேர உள்ளார்.

ஆப்பிள் மற்றும் கூகிள்

ஆப்பிள் மற்றும் கூகிள்

மைக்கெலின் வெளியேற்றம் குறித்தும், Assistant சேவை குழுவில் இவரின் இணைப்பு குறித்தும் ஆப்பிள் மற்றும் கூகிள் உறுதி செய்துள்ளது.

மைக்கெல் சேமேன்

மைக்கெல் சேமேன்

இதுக்குறித்து மைக்கெல் கூறுகையில், இன்றைய இளம் தலைமுறை மற்றும் டீனேஜ் குழந்தைகள் மத்தியில் வாய்ஸ் பேஸ்ட் சிஸ்டம் பெரிய அளவிலான வரவேற்பு உள்ளது. இதேபோல் கூகிளின் Assistant சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பணியாற்றுவதில் பெருமைகொள்வதாக கூறியுள்ளார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google and Facebook are fighting over Michael Sayman

Google and Facebook are fighting over Michael Sayman
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X