கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பாரம்பரியமாக பயன்படுத்தி வரக்கூடிய தேடு பொறிகளுக்கு பெரிய போட்டியாக ஏஐ நிறுவனங்கள் தேடு பொறிகளை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன. முன்பெல்லாம் மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை கூகுள் சர்ச் என்ஜினை பயன்படுத்தி தேடுவார்கள். ஆனால் தற்போது மக்கள் ஏஐ செயலிகளை நோக்கி நகர்ந்துவிட்டனர்.
ஏஐ போட்டி: சாட் ஜிபிடி, மெடா ஏஐ, கிராக் , ஜெமினி ஏஐ ஆகிய செயலிகளை கொண்டு மக்கள் தங்களுக்கு தேவையான துல்லியமான தகவல்களை பெறுகின்றனர். இதனால் கூகுள் உள்ளிட்ட தேடு பொறிகளை மக்கள் பயன்படுத்துவது படிப்படியாக குறைந்துவருகிறது. இதனை அடுத்து தான் கூகுள் AI Mode என்ற ஒரு புதிய மோடை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இருந்தாலும் மக்களிடையே அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

கமெட் (Comet) ஏஐ பிரவுசர் அறிமுகம்: இந்நிலையில் பெர்பிளெக்சிட்டி ஏஐ நிறுவனம் கூகுளுக்கு போட்டியாக Comet என்ற ஒரு தேடு பொறியை அறிமுகம் செய்துள்ளது. முழுக்க முழுக்க ஏஐ அடிப்படையில் இயங்கும் ஒரு தேடு பொறி இது. இதனை அறிமுகம் செய்துள்ள பெர்பிளெக்சிட்டி நிறுவனம், ஆர்வம் தான் மக்களை தேடு பொறிகளை நோக்கி வர வைக்கிறது, அதனை மேலும் ஊக்கப்படுத்தவே ஏஐ அடிப்படையிலான Cometஐ அறிமுகம் செய்கிறோம் என அறிவித்துள்ளது.
இனி எல்லாமே ஏஐ தான்: மக்கள் பாரம்பரியமான தேடு பொறிகளில் இருந்து படிப்படியாக ஏஐ தொழில் நுட்பம் அடிப்படையிலான தேடுதல்களை நோக்கி மாறி வருகின்றனர். இதனை புரிந்து கொண்ட பெர்பிளெக்சிட்டி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வெப் பிரவுசரை அறிமுகம் செய்திருக்கிறது. ஏஐ அடிப்படையில் இது இயங்கும் என தெரிவித்திருக்கிறது. வேலை , ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்காக தேடுபொறிகளை நாடும் மக்களுக்கு Comet தேடுபொறி உதவியாக இருக்கும் என்றும் இது மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும் என்றும் கூறியிருக்கிறது.

என்னென்ன வசதி உள்ளது?: உதாரணமாக Comet பிரவுசரை பயன்படுத்தி ஆலோசனை கூட்டங்களை திட்டமிடலாம், மின்னஞ்சல் அனுப்ப செய்யலாம் என பெர்பிளெக்சிட்டி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. Comet assistant என்ற ஒரு புதிய வசதியையும் கொண்டு வந்திருக்கிறது. இது ஒரு ஏஐ ஏஜென்ட் போல செயல்படும். நாம் அன்றாடம் செய்யக்கூடிய சில வழக்கமான பணிகளை இந்த ஏஐ ஏஜென்ட் கொண்டு நாம் ஆட்டோமேட் செய்து விட்டோம் என்றால் தினசரி நமக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களை படித்து காட்டுவது, முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிவிப்பது ஆகிய வேலைகளை செய்யும்.
நமக்கு வேலை மிச்சம்: நாம் கூகுளில் ஒரு தகவலை தேடும் போது அது தனி தனி டேப்களாக வரும், ஆனால் இது வொர்க் ஸ்பேஸ் முறையில் ஒரே இடத்தில் இருப்பதால் நாம் எளிதாக அனைத்து தகவல்களையும் உடனடியாக பார்த்து தெரிந்து கொள்ள முடியும். Cometஇல் நாம் சில நிமிடங்களுக்கு ஒரு டேப்பை பயன்படுத்தாமலே வைத்திருக்கிறோம் என்றால் அதுவே தானாக அந்த டேபினை க்ளோஸ் செய்து விடும் . மேலும் நாம் ஒரு தகவலை தேடுகிறோம் என்றால் அதனை வாய்ஸ் மற்றும் வீடியோ முறையில் சுருக்கமாக நமக்கு தெரிவிக்கும்.
தற்போதைக்கு பெர்பிளெக்சிட்டி மேக்ஸ் சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே Comet செயலி கிடைக்கிறது.மாதம் 200 டாலர்கள் சந்தா செலுத்துபவர்களே மேக்ஸ் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர். அடுத்தடுத்து இந்த வசதி அனைவருக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications