பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்துமே ஏஐ தொழில்நுட்பத்தை தங்களின் அன்றாட பணிகளில் ஒன்றாக இணைத்து விட்டன. இதனால் தங்களுடைய செயல்பாட்டு முறையிலேயே அவை பெரிய மாற்றத்தை கொண்டு வருகின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம் அண்மையில் மிக முக்கியமான ஒரு நிர்வாக ரீதியிலான மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.
கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் மேலாளர் நிலையில் பணிபுரிந்து வந்த சுமார் 35 சதவீதம் பெயரை கடந்த வாரம் வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது. இவர்கள் அனைவரும் சிறிய அளவிலான குழுக்களை மேலாண்மை செய்து வந்தவர்களாம். மூன்று மற்றும் அதற்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள ஊழியர்களை மேலாண்மை செய்து வந்த மேலாளர்கள் இந்த பணி நீக்க நடவடிக்கையின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என சிஎன்பிசி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு முதலே கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக பணியாளர்கள் படிநிலையிலே பெரிய மாற்றம் வந்துள்ளது., அதிக எண்ணிக்கையில் இருந்த மேலாளர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். இதற்கு அதிக மேலாளர்கள் இருந்தால் முடிவுகள் எடுக்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக காரணம் கூறுகிறார் சுந்தர் பிச்சை.
அதன் ஒரு பகுதியாக தான் தற்போது மேலாளர்கள் பதவி நீக்கம் நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . கூகுள் நிறுவனம் பெருமளவிலான வேலைகளை ஏஐ வசம் ஒப்படைத்து தங்களுடைய செயல் திறனை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாக தேவையற்ற பதவிகளையும் பொறுப்புகளையும் நீக்கி வருவதாக கூகுள் தலைமை தெரிவிக்கிறது.
2023 ஆம் ஆண்டு முதலில் கூகுள் நிறுவனம் ஊழியர்கள் பணி மிக்க நடவடிக்கையை கையில் எடுத்து விட்டது. சர்ச், மார்க்கெட்டிங், ஹார்டுவேர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலை செய்து வந்த ஊழியர்களையும் படிப்படியாக வேலையிலிருந்து நீக்கிய வண்ணம் இருக்கிறது. google நிறுவனம் தங்களுடைய மேலாளர் பதவிகளில் இருப்பவர்களில் மூன்றில் ஒருவரை பணியில் இருந்து நீக்கம் செய்து இருக்கிறது.
இது தொடர்பாக தலைமையகத்தில் சுந்தர் பிச்சை தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறுவன ஊழியர்களை பார்க்கும்போது மேலாளர்கள் இயக்குனர்கள் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது என்றும் அதனை முதலில் குறைப்பது என்றும் முடிவு செய்து தான் இப்படி ஒரு நடவடிக்கையை கூகுள் நிறுவனம் கையில் எடுத்திருக்கிறதாம். இன்னும் பல்வேறு தைரியமான நடவடிக்கைகளை அடுத்தடுத்து எடுக்க இருப்பதாக அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தில் அதிகளவிலான பணத்தை முதலீடு செய்து விட்டது அதனை ஈடு கட்டுவதற்காக பணிநீக்க நடவடிக்கைகளை ஒருபுறம் எடுத்து வருகிறது . மேலும் கூகுள் நிறுவனம் தங்களுடைய பல்வேறு பிரிவுகளின் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கும் தானாகவே வேலை விட்டு செல்வதற்கான திட்டங்களையும் அறிமுகம் செய்திருக்கிறது. திடீரென வேலையில் இருந்து நீக்குவதை விட தானாக வேலை விட்டு செல்வதற்கான வாய்ப்புகளை வழங்கலாம் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை ஏற்கும் ஊழியர்களுக்கு 14 வார கால சம்பளம், 6 மாத மருத்துவ காப்பீடு ஆகியவை வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications