2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் செலவு சென்ற வருடம் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று அறிவித்துள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் திங்கட்கிழமை 2018-ம் ஆண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதில் 30.29 பில்லியன் டாலர் வருவாய் இருக்கும் எதிர்பார்த்த நிலையில் 31.15 பில்லியன் டாலர் வருவாயினைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கூகுள் தேடுபொறி
தேடுபொறி சேவையில் முதன் நிறுவனமாக உள்ள நிலையில் சென்ற காலாண்டில் அதிகளவில் செலவும் செய்துள்ளது. ஆல்பாபெட்டில் கூகுள் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 7.669 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
செலவு
இதுவே 2017-ம் ஆண்டு முதல் காலாண்டில் கூகுள் நிறுவனம் 2.409 பில்லியன் டாலர் மட்டுமே செலவு செய்திருந்தது. 2017-ம் ஆம் ஆண்டின் 4-ம் காலாண்டுடன் (3.805 பில்லியன் டாலர்) ஒப்பிடும் போது இரண்டு மடங்கு கூடுதாகச் செலவு செய்துள்ளது.
வல்லுநர்கள் கூகுள் நிறுவனம் 2018-ம் ஆன்ஈண் முதல் காலாண்டில் 3.5 பில்லியன் டாலர் வரையில் மட்டுமே செலவு செய்து இருக்கும் எதிர்பார்த்தனர்.
வருவாய்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆல்பாபெட்டின் நிகர வருவாய் முதல் காலாண்டில் 73 சதவீதம் உயர்ந்து 9.4 பில்லியன் டாலர் ஆக உள்ளது. சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 25 பில்லியன் டாலர் ஆக இருந்த வருவாய் 26 சதவீதம் உயர்ந்து 31 பில்லியன் டாலர் ஆக உள்ளது.
கூகுள் - பேஸ்புக்
தரவு திருட்டில் ஈடுபட்டதாகப் பேஸ்புக் நிறுவனம் மீது விசாரணை நடைபெற்றதாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கூகுளின் யூடியூப் கூடத் தான் தரவுகளை விற்கிறது என்று பொறுமை இழந்த மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்த போது கூகுள் நிறுவனத்திற்குப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. பங்குகள் உயர்வில் தான் உள்ளது.
எச்டிசி
எச்டிசி நிறுவனத்தில் இருந்து மொபைல் வணிகத்தினை மேம்படுத்த 2,000 ஊழியர்களைப் பணிக்கு எடுத்த நிலையில் கூகுளின் ஆப்ரேட்டிங் மார்ஜின் சரிவை சந்தித்துள்ளது.
எப்படிச் செலவு அதிகரித்துள்ளது
ஊழியர்களுக்குப் பங்குகள் அளித்தது மற்றும் யூடியூப் டிவியில் ஸ்ட்ரீமிங் ரைட்ஸ் அளித்த போன்றவற்றில் கூகுள் நிறுவனத்திற்குச் செலவு அதிகரித்துள்ளதாகவும், அமேசான் போட்டியாகக் கூகுள் ஹோம் திட்டத்திற்கு அதிகம் செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications