விளம்பரம் பன்னா போதும் லாபம் பிச்சிக்கும்.. இது கூகிள் பார்மூலா!

கலிபோர்னியா: உலகின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் தேடுதல் தளமான கூகிள் நிறுவனம், 2015ஆம் நிதியாண்டின்முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் 4 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் விளம்பர வருமான அதிகரித்ததால் இக்காலாண்டில் லாப அளவு 3.59 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதுஎனக் கூகிள் தனது காலாண்டு நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

லாபம் மற்றும் வருவாய்

லாபம் மற்றும் வருவாய்

2015ஆம் ஆண்டின் ஜனவரி - மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவு 4 சதவீதம்அதிகரித்து 3.59 பில்லயன் டாலராகவும், வருவாயின் அளவு 12 சதவீதம் அதிகரித்து 17.3 பில்லியன் டாலராகவும் உள்ளது.

இந்நிறுவனத்தின் அதிகப்படியான வருமானத்திற்கு இக்காலகட்டத்தில் கிடைத்த விளம்பர வருவாய் முக்கியப் பங்குவகுக்கிறது.

 

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

பிற நிறுவனங்களைப் போலவே கூகிள் நிறுவனத்திற்கும் டாலர் மதிப்பு குறைந்ததால் சர்வதேச சந்தையில் இருந்து கிடைக்கப்பெறும் வருவாய் குறைந்துள்ளது.

ஜனவரி - மார்ச் மாத காலகட்டத்தில் டாலர் மதிப்பு நிலைப் பெற்றிருந்ததால், நிறுவனத்தின் வருவாய் 17 சதவீதம் வரை உயர்ந்திருக்கும் எனக் கூகிள் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி பேட்ரிக் பிச்சட் தெரிவித்தார்.

 

மொபைல் விளம்பர

மொபைல் விளம்பர

உலக நாடுகளில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து இந் நிறுவனத்தின் மொபைல் விளம்பர வருவாய் 2015ஆம் ஆண்டின் முடிவில் இரட்டிப்பாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கூகிள் மற்றும் பேஸ்புக்

கூகிள் மற்றும் பேஸ்புக்

விளம்பர வருவாயில் கூகிள் வெறும் 10% மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பர வருவாய் 46 சதவீதம் உயர்ந்துள்ளது.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

கூகிள் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியான பின்னும் இந்நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் 2 சதவீதஉயர்வைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+