கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் கடந்த 2024 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்காக மட்டும் 68 கோடி ரூபாயை செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார. சுந்தர் பிச்சை 2015 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார். 2019 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஆல்பபெட் என்ற தாய் நிறுவனத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டது. இதனை அடுத்து ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 2019 ஆம் ஆண்டு முதல் இவர் பதவி வகித்து வருகிறார்.

உலகம் முழுவதும் தேடுபொறியில் தொடங்கி பல்வேறு தளங்களிலும் கூகுள் தான் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக இருக்கிறது. அத்தகைய மிகப்பெரிய நிறுவனத்தை கட்டி ஆண்டு வருபவர் தான் சுந்தர் பிச்சை. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக மட்டும் கூகுள் நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 68 கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறது.
கூகுள் நிறுவனம் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் 2024 ஆம் ஆண்டில் தங்கள் நிறுவனத்தின் செலவினங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக 57.48 கோடி ரூபாயை செலவு செய்த கூகுள் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் 22 சதவீதம் கூடுதலாக சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக மட்டும் செலவு செய்திருக்கிறது.
சுந்தர் பிச்சையின் வீட்டிற்கு வழங்கப்படும் பாதுகாப்பு, அவரது பாதுகாப்புக்கான ஆலோசனைகள் ,கண்காணிப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் பயணம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றிற்காக இந்த தொகை செலவிடப்பட்டுள்ளது என கூகுள் நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் சுந்தர் பிச்சைக்கு பாதுகாப்புக்காக செலவு செய்யப்பட்டுள்ள இந்த தொகையானது தலைமை செயல் அதிகாரி பொறுப்பின் மூலம் அவருக்கு கிடைக்கும் தனிப்பட்ட பலன்களுக்குள் வராது என கூகுள் நிறுவனம் விளக்கம் தந்துள்ளது.
சுந்தர் பிச்சையின் தொழில் முறை பொறுப்பை கவனத்தில் கொண்டு தான் நிறுவனமே இந்த பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது என கூறியுள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சை அதிக இடங்களுக்கு பயணம் செய்ததே அவருக்கான பாதுகாப்பு செலவினங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது என கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications