இன்றைய நவீனமயமான உலகில் சமுக வலைத்தளம் நம் வாழ்வில் ஒரு பகுதியாக மாறிய நிலையில், வீடியோ சாட்டிங் சேவையும் ஒரு அங்கமாக மாறி வருகிறது.
வீடு முதல் அலுவலகப் பணிகள் வரை அனைத்து முக்கியமான பணிகளிலும் இன்றளவில் வீடியோ சாட்டிங் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில் சந்தையில் சிறப்பான வீடியோ சேட்டிங் சேவை அளிப்பது யார் என்பதே வர்த்தக உலகில் இப்போதைய போட்டி.
இப்படி யார் போட்டு போடுகிறார்கள்..? குப்பனும் சுப்பனும் இல்லை.. போட்டி களத்தில் இருக்கும் அனைவரும் ஜம்பவான்.
வீடியோ சாட்டிங் சேவை
சந்தையில் தற்போது அதிகளவில் பயன்படுத்தி வரும் வீடியோ சாட்டிங் சேவைகளில் முக்கியமானவை ஆப்பிள் நிறுவனத்தின் பேஸ்டைம். அதைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தில் மெசஞ்சர்.
ஏற்கனவே இவர்கள் மத்தியிலான போட்டி உச்சத்தில் இருக்கும் போது டெக் உலகின் ஜாம்பவான் எனக் கூறப்படும் கூகிள் களத்தில் குதித்துள்ளது.
டியோ
கூகிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் -க்குப் போட்டியாக ALLO என்ற குறுச்செய்தி சேவையை அறிமுகம் செய்த நிலையில், தற்போது DUO என்ற வீடியோ சாட்டிங் சேவையை அறிமுகம் செய்து சந்தையில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது.
வித்தியாசம்
சந்தையில் உள்ள பேஸ்டைம், ஸ்கைப் ஒப்பிடுகையில் DUO-வில் மிகப்பெரிய வித்தியாசம் என்று ஒன்றுமில்லை. ஆனால் "Knock, knock." என்ற வசதி மட்டும் புதிதாக உள்ளதாக இதன் அறிமுக விழாவில் தெரியவந்துள்ளது.
அறிமுகம்
இந்தச் சேவையைக் கூகிள் நிறுவனம் கடந்த மே மாதம் சந்தைக்கு அறிமுகம் செய்த நிலையில், வாடிக்கையாளர்களின் இலவச பயன்பாட்டுக்கு கூகிள் பிளே வாயிலாகக் கடந்த செவ்வாய்க்கிழமை இணைத்தில் வந்தது.
முதல் கட்டம்
கூகிள் நிறுவனத்தில் இந்த டியோ சேவை தற்போது கூகிள் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐபோன் இயங்கு தளத்திற்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மொபைல் எண்
பிற சேவைகளில் வீடியோ கணக்கு, சாட்டிங் கணக்கு என இரண்டிலும் இணைக்கப்பட்டால் மட்டுமே வீடியோ சேவையைப் பயன்படுத்த முடியும். ஆனால் டியோ செயலியில் மொபைல் எண் இருந்தால் மட்டும் போதும்.
பழைய சேவை
ஏற்கனவே கூகிள் நிறுவனம் வீடியோ சாட்டிங் சேவையைத் தனசு Hangout சேவையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த நிலையில், தற்போது வர்த்தக நிறுவனங்களுக்காகப் பிரத்தியேகமான சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது.
ஆல்பபெட்
கூகிள் நிறுவனத்தில் இருந்து ஆல்பபெட் பிரிந்த பிறகு, ஆல்பபெட் மூலம் கூகிள் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட இரு மொபைல் செயலிகள் இவை. டியோ மற்றும் ALLO.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications