பிரிட்டன்: பிரிட்டனில் வெளியாகும் சண்டே டைம்ஸ் இதழ் அந்நாட்டில் வசிக்கும் முதல் ஆயிரம் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 84 வயதான கோபிசந்த் இந்துஜா முதலிடத்தை பிடித்துள்ளார்.
சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் படி பிரிட்டனில் 37.196 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடன் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் கோபிசந்த் இந்துஜா. கடந்த ஓராண்டில் மட்டும் இவரது சொத்து மதிப்பு 2.196 பில்லியன் பவுண்டு உயர்ந்துள்ளது. சண்டே டைம்ஸின் பணக்காரர்கள் பட்டியலில் இந்துஜா குடும்பத்தினர் முதலிடத்தை பிடிப்பது இது ஆறாவது முறையாகும்.

இந்த முதல் ஆயிரம் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள மற்றொரு இந்தியர் லட்சுமி மிட்டல் இவர். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார் இவரது நிகர சொத்து மதிப்பு 14.92 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.
ஜிபி என பரவலாக அறியப்படக்கூடிய கோபிச்சந்த் இந்துஜா, தற்போது இந்துஜா ஆட்டோமோட்டிவ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அவரது மூத்த சகோதரர் அண்மையில் உயிரிழந்ததை அடுத்து நிறுவனத்தின் தலைவர் பொறுப்பினை இவர் ஏற்றுக் கொண்டார். 1940 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த கோபிசந்த் இந்துஜா, தந்தையின் தொழிலில் இணைந்தார். பின்னர் பிரிட்டனிலேயே செட்டிலாகிவிட்டார்.
இந்துஜா குழுமம் தற்போது 48 நாடுகளில் ஐடி ,சைபர் செக்யூரிட்டி, சுகாதாரம், வர்த்தகம் ஆட்டோமோட்டிவ், ரசாயனம், வங்கி மற்றும் நிதி சேவை, மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட், ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் சிந்து பகுதியில் பிறந்த பரமானந்த் தீப்சங் இந்துஜாவால் கடந்த 1914ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்துஜா குழுமம். இவருக்கு கோபிசந்த், ஸ்ரீசாந்த், பிரகாஷ் மற்றும் அசோக் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர்.
1940 ஆம் ஆண்டு பிறந்த கோபிசந்த் 1959 ஆம் ஆண்டு மும்பை ஜெய்ஹிந்த் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் பிரிட்டன் சென்ற அவர் சட்டப் படிப்பில் கௌரவ டாக்டர் பட்டமும், ரிச்மண்ட் கல்லூரியில் பொருளாதாரத்தில் கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
1959ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த கையோடு தந்தையின் தொழிலில் இறங்கினார். அண்மையில் இவரது மூத்த சகோதரர் இறந்ததை அடுத்து நிறுவனத்தின் தலைமை பொறுப்பு இவருக்கு கிடைத்தது. இந்துஜா குழுமத்தை உலகளாவிய நிறுவனமாக உயர்த்தியதில் இவரது பங்கு முக்கியமானதாக சொல்லப்படுகிறது. இவர் வங்கி மற்றும் எண்ணெய் வணிகம் உள்ளிட்டவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
Story written by: Devika
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications