பணவீக்கத்தினால் மக்களுக்கு மோசமான பாதிப்பு.. பாகிஸ்தான் பெண்ணின் குமுறல்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் மக்கள் அதன் தாக்கத்தினை உணரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக மிக மோசமான விலைவாசி, கடன், நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்து வரும் பாகிஸ்தான், இலங்கையில் இது மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பெண் ஒருவர் வீடியோ பதிவொன்றில், பாகிஸ்தான் அரசினை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

சீன ஸ்மார்ட்போன்களை தவிர்ப்பது சாத்தியமா.. இந்தியாவின் நிலை என்ன? சீன ஸ்மார்ட்போன்களை தவிர்ப்பது சாத்தியமா.. இந்தியாவின் நிலை என்ன?

அரசு ஏழைகளை கொன்று விட்டது?

அரசு ஏழைகளை கொன்று விட்டது?

அதில் விலைவாசி விண்ணைத் தொட்டுள்ளது. நாங்கள் வீட்டு வாடகை கொடுக்க வேண்டும். மிக அதிகமான மின்சார கட்டணம் செலுத்த வேண்டும். பால் வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு மருந்து வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். நான் அவர்களை கொன்று விடவா? ஏற்கனவே அரசு ஏழைகளை கொன்று விட்டது என்று கடுமையான விமர்சனம் செய்து அவர் தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

கராச்சியை சேர்ந்த பெண்

கராச்சியை சேர்ந்த பெண்

கராச்சியை சேர்ந்த ரபியா தான் அந்த பெண். வாடகையை செலுத்திய பின்னர், உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம் என பலவும் செலுத்திய பிறகு தன்னிடம் எதுவும் பணம் இல்லை. தனது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் நிலவரம் இது தான்?
 

பாகிஸ்தானின் நிலவரம் இது தான்?

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இதே நிலை தான் அங்கு நிலவி வருகின்றது. மக்கள் ஒரே வேளை உணவு கூட அங்கு சரியாக உண்ண முடியாத நிலையே இருந்து வருகின்றது.

பாகிஸ்தானின் வருடாந்திர பணவீக்க விகிதம் ஜூன் 2022ல் 21.3% ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 13.8% ஆகவும் இருந்தது. இது கடந்த 2008க்கு பிறகு இந்தளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

செலவினங்கள் மோசமான அதிகரிப்பு

செலவினங்கள் மோசமான அதிகரிப்பு

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது. போக்குவரத்து செலவுகள் 64.7% அதிகரித்துள்ளது. வாகனங்களுக்கான எரிபொருள் விலை 94.4% அதிகரித்துள்ளது. இதே உணவு மற்றும் மது அல்லாத பானங்கள் 28.8%மும், காய்கறிகள் 40.5%, பருப்பு வகைகள் 92.4%மும் ஏற்றம் கண்டுள்ளது.

உணவு பொருட்கள் விலை அதிகரிப்பு

உணவு பொருட்கள் விலை அதிகரிப்பு

சமையல் எண்ணெய் விலை 72.6%, கோதுமை 45%, பால் 24.8%, உணவகங்கள் & ஹோட்டல்களில் 25%, மது மற்றும் புகையிலை பொருட்கள் - 22.5%மும், வீடு மற்றும் பயன்பாட்டு பொருட்கள் - 21.8%மும், மின்சார கட்டணம் - 86.7%, நுகர்வோர் பொருட்கள் 4.4% ஏற்றமும் ஏற்றம் கண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government of Pakistan has already impoverished people due to inflation

Government of Pakistan has already impoverished people due to inflation/அரசு ஏற்கனவே ஏழைகளை கொன்றுவிட்டது..பாகிஸ்தான் பெண்ணின் குமுறல்.. !
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X