கை நழுவி போகும் வாய்ப்பு.. இந்தியாவிலிருந்து பிரேசிலுக்கு மாற்ற திட்டமா.. கிரேட் வால் மோட்டார்ஸ்?

சீனாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ், இந்தியாவில் முதலீடு செய்ய சில வருடங்களாகவே திட்டமிட்டு வருகின்றது. இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில் அதன் ஒரு பகுதியை பிரேசிலுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சீனா நிறுவனம் அரசின் அனுமதிகளை பெறுவதில் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டு வரும் நிலையில், இந்த முடிவினை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டம் 300 மில்லியன் டாலர் வரையில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரேசிலுடன் ஒப்பந்தம்

பிரேசிலுடன் ஒப்பந்தம்

இந்த நிறுவனம் பிரபலமான விளையாட்டு - பயன்பாட்டு வாகனத்தினை தயாரிக்கும் முன்னாள் டைம்லர் ஆலையை வாங்குவதற்காக தயாராகி வருவதாகவும், இது குறித்த பேச்சு வார்த்தை முடியும் தருவாயில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் பிரேசிலில் இந்த ஒப்பந்தம் முடிவடைந்தாலும், இந்தியாவில் இந்த ஒப்பந்தம் நிறுத்தப்படாது என்றும் கூறப்படுகிறது.

இந்தியா கடும் கட்டுப்பாடு

இந்தியா கடும் கட்டுப்பாடு

கடந்த ஆண்டில் சீனா - இந்தியாவின் எல்லை பிரச்சனையை அடுத்து, அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது இந்தியா. இது இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் அனைத்து நாடுகளுக்கும் தான் என்றாலும், இதன் பாதிப்பு அதிகம் சீனாவுக்கே.

சீனாவின் முதலீடு அதிகம்

சீனாவின் முதலீடு அதிகம்

சமீபத்திய ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடுகளின் லிஸ்டை பார்க்கும் போது, அதில் கணிசமான அளவு முதலீடு என்பது சீனாவுடையது தான். சீனாவின் பெரும் நிறுவனங்கள் தொடர்ந்து, இந்தியாவில் படிப்படியாக தங்களது முதலீடுகளை இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்தியவின் பிரபலமான பல ஸ்டார்டப் நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

என்ன தான் பிரச்சனை?

என்ன தான் பிரச்சனை?

இதற்கிடையில் தான் இந்தியாவின் எஃப்டிஐ விதிகளினால், எல்லையை ஒட்டிய நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களோ, குடிமக்களோ இந்தியாவில் நேரடியாக முதலீடுகளை மேற்கொள்ள மத்திய அரசின் முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கியது.
இதற்கு முன்பு வரை முதலீடு செய்துவிட்டு, பின்னர் ரிசா்வ் வங்கியிடம் தெரிவித்தாலே போதுமானதாக இருந்தது.
ஆனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அனுமதி பெற்றே நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

ஜெனரல் மோட்டார்ஸினை வாங்க திட்டம்

ஜெனரல் மோட்டார்ஸினை வாங்க திட்டம்

இதற்கிடையில் தான் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் இருந்தே அனுமதிக்காக காத்துக் கொண்டுள்ளது. இரு மாதங்களுக்கு முன்பாக ஒரு கண்காட்சியில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தினை வாங்குவதன் மூலம் பேட்டரிகள் மற்றும் கார் உதிரிபாகங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இதற்காக 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாகவும் கிரேட் வால் நிறுவனம் கூறியிருந்தது.

கிடப்பில் கிடக்கும் திட்டங்கள்

கிடப்பில் கிடக்கும் திட்டங்கள்

கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது, சீன முதலீட்டாளர்களிடையே அதிகரித்து வரும் பதற்றத்தினையே சுட்டிக் காட்டுகின்றது. இது தான் இப்படி எனில், மறுபுறம் தொழில்துறை மதிப்பீடுகளின் படி, 2 பில்லியன் டாலர் மதிப்பிலான, 150 முதலீட்டு திட்டங்கள் இது போன்று மெதுவாக செயல்பாட்டினால் கிடப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனுமதி எப்போது?

அனுமதி எப்போது?

கிரேட் வால் நிறுவனம் ஒப்புதல்களுக்கு தாமாதமாகலாம் என்ற நிலையில் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்றாலும், அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்பதையும் நிறுவனம் யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 சுமூக நிலை எப்போது?

சுமூக நிலை எப்போது?


இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் இருந்து, 45 நிறுவனங்களுக்கு அனுமதி கோரி நிலுவையில் இருந்தது. இதில் எத்தனை நிறுவனங்களுக்கு இதுவரையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் ஏதும் இல்லை. எனினும் எல்லை பிரச்சனையானது சுமூக நிலையை எட்டும் வரையில், வழக்கமான வணிக நிலையை எட்ட முடியாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன நிறுவனம் காத்திருக்கலாம்

சீன நிறுவனம் காத்திருக்கலாம்

எனினும் சீன உற்பத்தியாளர்கள் இரு நாடுகளின் வணிக உறவை மேம்படுத்தவும், இந்திய சந்தையில் விரிவுபடுத்தவும், காத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கிரேட் வால் மோட்டார் இந்தியாவில் அதன் கார்களை உற்பத்தி செய்ய விரும்புகிறது. அதன் விநியோக சங்கிலியை மேம்படுத்த விரும்புகிறது. அதன் உலகளாவிய விரிவாக்கத்தில் இந்தியா ஒரு பெரும் சந்தை. ஆக இந்தியாவில் காத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

வேறு எந்த நாடுகளில் உற்பத்தி

வேறு எந்த நாடுகளில் உற்பத்தி

கிரேட் வால் நிறுவனம் தற்போது ரஷ்யா மற்றும் தாய்லாந்தில் கார்களை உற்பத்தி செய்து வருகின்றது. இங்கு இந்தியாவில் தனது திட்டத்தினை அறிவித்த அதே நேரத்தில் அங்கும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல பிரேசிலிலும் தற்போது தனது விற்பனையை விரிவுபடுத்தி வருகின்றது. அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

பிரம்மாண்ட திட்டம்

பிரம்மாண்ட திட்டம்

கடந்த ஆண்டில் 1.1 மில்லியன் காரகளை கிரேட் வால் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது பெரும்பாலும் சீனாவில் அதிகளவில் விற்பனை செய்துள்ளது. தற்போது ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க சந்தையில் தனது விற்பனையை விரிவுபடுத்த திவீரமாக திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் அனுமதி கிடைக்குமா?

இந்தியாவில் அனுமதி கிடைக்குமா?

ஏற்கனவே பிஎம்டபள்யூ-வுடன் சேர்ந்து மின்சார மினி ரக கார்களையும் உற்பத்தி செய்து வருகின்றது. சீனாவில் ஜெர்மன் பிரீமியம் கார் தாயரிப்பாளருடன் இணைந்து ஆலையை உருவாக்கியும் வருகின்றது. மொத்தத்தில் உலகம் முழுக்க தனது சந்தையை விரிவுபடுத்த திட்டமிட்டு வரும் நிலையில், இந்தியாவில் அதற்கு அனுமதி கிடைக்குமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+