பிரஸ்ஸல்ஸ்: நிதியுதவிக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இழந்த கிரீஸ், ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இவ்வாக்கெடுப்பில் ஐரோப்பிய கவுன்சில் தனது 19 நாடுகளையும் கிரீஸ் நாட்டிற்குச் சாதகமாக வாக்களிக்கக் கேட்டுக்கொண்டது. ஆனாலும் வாக்குப்பதிவில் கிரீஸ் நாட்டிற்காகச் சாதகமான பதில் கிடைக்கும் என எந்தவிதிமான நம்பிக்கையும் இல்லை என்ற கருத்து நிலவுகிறது. இதனால் ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையும் கவலையில் உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கு அளிக்க வேண்டிய தவணை செலுத்த இன்றே (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள். தவணையைச் செலுத்தாவிட்டால் யூரோ நாணயைத்தை பயன்படுத்தும் 19 ஐரோப்பிய நாடுகளில் கிரீஸ் திவாலாக அறிவிக்கப்பட்டு, விலக்கி வைக்கப்படும்.
தவணை தொகையின் அளவு 1.8 பில்லியன் யூரோ.
ஐரோப்பிய தலைவர்கள்
மேலும் நாட்டை ஐரோப்பிய கூட்டணிக்குள் வைத்துக்கொள்ள வாக்கெடுப்பு நடத்தினாலே, கூட்டணியில் இருந்து கிரீஸ் விலக்கப்படுவதாகப் பொருள் என ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐரோப்பிய கமிஷன்
கிரீஸ் நாட்டிற்காக நிதியுதவி பெற பல கட்ட முயற்சிகள் செய்தும் முதலீட்டாளர்களுக்குக் கிரீஸ் நாட்டின் மீது நம்பிக்கை பெறவில்லை என ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாட் ஜன்கர் தெரிவித்தார்.
ஏஞ்சலா மெர்க்கல்
ஜெர்மனியின் அதிபரான ஏஞ்சலா மெர்க்கல் கிரீஸ் நாட்டின் நிதிநெருக்கடி குறித்து இரு முறை செய்தியாளர்களிடம் பேசினார்,. அப்போது, "யூரோ தோற்றுப்போனால் மொத்த ஐரோப்பாவும் தோற்றுப்போகும்" எனக் குறிப்பிட்டார். மேலும் அவர் கிரீஸ் நாட்டின் பிணை திட்டத்தையும் ஆய்வு செய்துள்ளார்.
அலெக்ஸ் சிப்ரஸ்
கடந்த வாரம் இந்நாட்டின் பிரதமர் நிதியுதவி இல்லாவிட்டால் நாடு மொத்தமும் முடங்கிவிடும் நிலையில் புதிய திட்டத்தை வகுத்தார். இதில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக நாட்டு மக்களின் ஒய்வுதியத்தில் சில சதவீத படித்ததை அறிவித்தார்.
இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது.
கண்டிப்பாக முடியாது..
திங்கட்கிழமை இரவு செய்தி நிறுவனத்திற்கு அலெக்ஸ் சிப்ரஸ் அளித்த பேட்டியில், கிரீஸ் வங்கிகள் கடனில் மூழ்கித் தவிக்கும்போது எப்படித் தவணையைச் செலுத்த முடியும் எனச் சிப்ரஸ் வெளிப்படையாக அறிவித்தார்.
மக்கள் பீதி...
கடந்த ஞாயற்றுக்கிழமை இந்நாட்டு வங்கிகள் முழுமையாக மூடப்பட்ட நிலையில், மக்களின் பணத்தைக் கொண்டு கிரீஸ் தவணையை அளிக்குமா என்ற சந்தேகம் நாட்டு மக்கள் மத்தியில் பரவத் துவங்கியது.
மேலும் அரசின் இம்முடிவிற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து. இரவு பகலாகத் தங்களது பணத்தை எடுத்துக்கொள்ள ஏடிஎம் இயந்திரத்தின் முன் உள்ளனர்.
வங்கி சேவை முடக்கம்
நிதியுதவி அளிக்க முடியாது என ஐரோப்பிய சென்டரல் வங்கி கடந்த ஞாயற்றுக்கிழமை அறிவித்துவிட்ட நிலையில், கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்ஸ் சிப்ரஸ் இந்நாட்டு வங்கிகளை அடுத்த ஒரு வாரத்திற்கு மூட உத்திரவிட்டார்.
இதனால் இந்நாட்டுப் பங்குச்சந்தையும் முடங்கியது.
ஏடிஎம்
மேலும் ஏடிஎம் சேவைகளிலும் ஒரு நாளில் 60 யூரோ வரை மட்டுமே எடுத்துக்கொள்ளக் கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications