பிரஸ்ஸல்ஸ்: கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்த கிரீஸ் நாட்டின் புதிய திட்டத்திற்கு ஐஎம்எப் மற்றும் ஐரோப்பிய யூனியன் முதற்கட்ட ஒப்புதல் அளித்துள்ள நிலையில், திங்கட்கிழமை நடத்த முக்கியக் கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் நிதியமைச்சர்களும் இப்புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இயல்பு நிலை
இதன் மூலம் கிரீஸ் பொருளாதாரம் மற்றும் அரசு கூடிய விரைவில் இயல்பு நிலைக்கும் திரும்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகள் திறப்பு
இரண்டு வாரங்களுக்குப்பின் கிரீஸ் வங்கிகள் அடுத்த இரு தினங்களில் திறக்கப்படலாம் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அலெக்சிஸ் சிப்ரஸ்
கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் தற்போது அளித்துள்ள திட்டத்தில் ஐரேப்பிய நாடுகள் அறிவுறித்தியப்படி வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரி உயர்வு
இதன் காராணமாகக் கிரீஸ் பொருளாதாரத்தில் வரி உயர்வு, ஒய்வுதியத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய கூட்டம்
மேலும் ஒப்புதல் அளிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் பிரஸ்ஸல்ஸ் நகரில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஐஎம்எப்
இதுகுறித்து ஐஎம்எப் அமைப்புக் கூறுகையில், கிரீஸ் நாட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு, இந்நாட்டின் முன்னேற்றத்தைக் காண காத்துக்கிடக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications