ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டிற்கான நிதியுதவி குறித்த பேச்சுவார்த்தை ஏதென்ஸ் நகரில் முறிவடைந்ததால், கிரீஸ் நாட்டில் வங்கிகள், பங்குச்சந்தைகள், ஏடிஎம் இயந்திரங்களை ஆகியவை முடப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் ஏடிஎம் பரிமாற்றங்களிலும் அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்துக் கிரீஸ் மக்களுக்கு அந்நாட்டு அரசு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது.

மின்னணு பரிமாற்றத்திலும், உள்நாட்டுப் பரிமாற்றங்களை மட்டுமே கிரீஸ் அரசு அனுமதி அளிக்கிறது. இதனால் கிரீஸ் நாட்டில் உள்ள பணம் அடுத்த ஒரு வாரத்திற்கு வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
அடுத்த 30 மணிநேரத்தில் ஐஎம்எப் அமைப்பிற்குக் கிரீஸ் 1.6 பில்லியன் யூரோ மதிப்பிலான கடன் தவணைத் தொகையைச் செலுத்த வேண்டும் இல்லையெனில் கிரீஸ் திவலாக அறிவிக்கப்படும்.

மேலும் நிதியுதவிக்கான பேச்சுவார்த்தையை அடுத்த வார ஞாயிற்றுக்கிழமைக்குச் சர்வதேச கடன் அளிப்போர் ஒத்திவைத்தால் கிரீஸ் நாட்டின் பிரதமர் சிப்ரஸ் கடும் கோபத்தில் உள்ளார் என அந்நாட்டுப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications