ஏதென்ஸ்: 5 ஆண்டிய நிதிநெருக்கடி பிரச்சனையைத் தீர்க்கவும், சர்வதேச நாணய நிதியத்திற்கு அளிக்க வேண்டிய தவணைத் தொகையைச் செலுத்தவும் கிரீஸ் அரசு அறிவித்த புதிய சிக்கன உடன்பாட்டை எதிர்த்து ஒய்வூதியதாரர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஒய்வூதியம்
பல நாடுகளும், பல தரப்பினரும் ஒய்வூதியத்தைக் குறைக்க பரிந்துரை செய்தும் குறைக்காத கிரீஸ், இறுதிக்கட்டத்தில் பென்ஷன் அளிப்பில் சில புதிய பிடித்தங்களையும், சில விகிதத்தையும் உயர்த்தியது.
போராட்டம்
இப்புதிய பிடித்தங்களை எதிர்க்கும் வகையிலேயே ஒய்வூதியதாரர்கள் ஏதென்ஸ் நகரில் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
போலீசார்
மேலும் இவர்கள் கிரீஸ் நாட்டின் முக்கிய வீதிகளில் சாலை மறியல் செய்துவருகின்றனர். இவர்களைப் போலீசார் கட்டுப்படுத்த மட்டுமே முடியும் நிலையில் உள்ளனர். இவர்களை எதிர்க்கும் மன நிலையில் இல்லாததால், சுமுகமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். (போராட்டத்தில் இறங்கியுள்ள அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இதுவே போலிசாரின் தயக்கத்துக்குக் காரணம்.)
240 பில்லியன் யூரோ
கிரீஸ் நாடு தற்போது 240 பில்லியன் யூரோ நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும் இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25% குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.
உடனடி நிதித் தேவை
இந்த நிதிநெருக்கடியைச் சமாளிக்க உடனடியாக 7.2 பில்லியன் யூரோ நிதியுதவி தேவைப்படுகிறது. இதனைப் பெறவே கிரீஸ் நாட்டு அரசு புதிய சிக்கன உடன்பாட்டை அறிவித்ததுள்ளது.


Click it and Unblock the Notifications