வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் சேவைத் துறை வளர்ச்சியில் மே மாதத்தில் எதிர்பாராத விதமாகச் சரிவை சந்தித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 9 மாத உயர்வான 55.8 புள்ளிகளில் இருந்த சேவை துறை வளர்ச்சி மே மாதத்தில் 53.8 ஆகக் குறைந்துள்ளது என IHS மார்கிட் பிஎம்ஐ குறியீடு மற்றும் CIPS அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுவாக 50 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தாலே வளர்ச்சி பாதையில் இருக்கிறது என்பது பொருள்.
இந்நாட்டின் சேவை துறை வளர்ச்சி தொய்வால் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் 0.2 சதவீதம் வரை சரிந்துள்ளது. இது கடந்த 6 மாதங்களை ஒப்பிடும் போது சேவைத் துறையால் பிரிட்டன் பொருளாதாரம் சுமார் 0.7 சதவீதம் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மே மாதத்தில் ஏற்பட்ட சரிவிற்கு முக்கியக் காரணம், புதிய ஆர்டர்களின் எண்ணிக்கை குறைவும், பொதுத் தேர்தல் காரணமாக நுகர்வோர் செலவின குறைவு மற்றும் தாமதமான வர்த்தக முடிவுகள் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
அதேபோல் மே மாதத்தில் பிரிட்டன் நாட்டின் உற்பத்தித் துறை அதிகளவில் பாதித்துள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் கட்டுமான துறையைத் தவிர அனைத்துத் துறைகளும் சரிவை மட்டுமே சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications