மத்திய அரசு இந்திய ராணுவத்திற்கு எவ்வளவு செலவு செய்கின்றது என்று தெரியுமா..?

ஐஎச்எஸ் ஜேன்ஸ் அன்மையில் வெளியிட்ட அறிக்கையில் உலக நாடுகள் தங்களது நாட்டின் பாதுகாப்பு துறைக்கு எவ்வளவு செலவழிக்கின்றன என்பதை வெளியிட்டுள்ளது.

உலகப் போர் இரண்டிற்குப் பிறகு உலக நாடுகள் அனைத்தும் ராணுவத்திற்குச் செலவு செய்வதை குறைத்துக் கொண்டு வருகின்றது என்று நீங்கள் நினைத்து வந்தால் இதைக் கொஞ்சம் படியுங்கள்.

ஐஎச்எஸ் ஜேன்ஸ் அன்மையில் வெளியிட்ட அறிக்கையில் உலக நாடுகள் தங்களது நாட்டின் பாதுகாப்பு துறைக்கு எவ்வளவு செலவழிக்கின்றன என்பதை வெளியிட்டுள்ளது.

அதில் 2015 ஆம் ஆண்டு 1.55 டிரில்லியன் டாலர்களாக இருந்த உலக நாடுகளின் பாதுகாப்பு துறையின் முதலீடுகள் 2016 ஆம் ஆண்டு இப்போது வரை 1.57 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்து உள்ளது.

எனவே நாம் இங்கு இந்தியா மற்றும் பிற உலக நாடுகள் என்ன செய்கின்றன என்று இங்குப் பார்ப்போம்.

சீனா

சீனா

சீனா தனது பாதுகாப்புத் துறைக்கு 2010-ம் ஆண்டு மட்டும் 123 பில்லியன் டாலர்களைச் செலவு செய்துள்ளது. இதுவே இப்போது இரண்டு மடங்காக இருக்கும் என்றும் 2020-ம் ஆண்டு குறைந்தபட்சம் 233 பில்லியின் டாலர்களா இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். இது இங்கிலாந்து செலவு செய்வதை விட 4 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

இந்தியா

சவுதி அரேபிய மற்றும் ரஷியாவை பின்க்குத்தள்ளி இந்தியா நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்தின் பவுண்டின் விலை மேலும் குறையும் பட்சத்தில் 2018-ம் ஆண்டிற்குள் இந்தியா இங்கிலாந்தை விட அதிகமாக பாதுகாப்புத் துறைக்கு முதலீடு செய்திருக்கும் என்று கூறப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த வரவு செலவு திட்டம்

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த வரவு செலவு திட்டம்

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் 2016 ஆம் ஆண்டு கூட்டு பட்ஜெட்219 பில்லியன் டாலர்கள் என அறிவித்துள்ளது, மேலும் இதனை வடக்கு ஐரோப்பிய நாடுகள் இதற்கான பொறுப்பை ஏற்கும்.

ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக இருப்பின் பொருளாதாரம் நன்கு வலுப்பெறும் ஆனால் இது பிரிக்ஸிட்-இன் சிக்கல்.

 

ரஷ்யா

ரஷ்யா

1990-ல் இருந்து ரஷ்யா பாதுகாப்புத் துறை மீதான முதலீட்டைக் குறைத்துக்கொண்டே வருகின்றது. 1990-ல் 48 பில்லியன் டாலர் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

நடப்பு சூழலில் எண்ணெய் விலை குறைவு போன்ற சிக்கலால் பாதுகாப்புத் துறை மீதான ரஷ்யாவின் முதலீடுகள் மேலும் குறையும் என்று கூறப்படுகின்றது.

 

அமெரிக்கா

அமெரிக்கா

பாதுகாப்புத் துறை முதலீட்டில் அமெரிக்கா 2016-ம் ஆண்டு மட்டும் 622 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இது உலக நாடுகளின் முதலீடுகள் அனைத்தையும் சேர்த்து பார்க்கும் பொது 40 சதவீதத்தை அமெரிக்கா தனது நாட்டிற்கு மட்டும் பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டாப் 5 நாடுகள்

டாப் 5 நாடுகள்

1. அமெரிக்கா
2. சீனா
3. இங்கிலாந்து
4. இந்தியா
5.ஐரோப்பிய ஒன்றியம்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+