ஈரானில் நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவது ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளின் அமைதியை கெடுக்கும் விஷயமாக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் வளைகுடா நாடுகள் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இன்று மாலை வெளியான முக்கிய அறிவிப்பில் ஈரான் நாட்டை தாக்க நினைத்தால் அமெரிக்க விமானங்களுக்கு சவுதி வான்பரப்பு, ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சவுதி அரேபியா தெளிவாகவும், திட்டவட்டமாகவும் தெரிவித்துள்ளது.
இதை சவுதி அரேபியா அரசு தரப்பில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமார தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மத்திய கிழக்கில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

சவுதி தலைமையிலான வளைகுடா நாடுகள்
சவுதி அரேபியா தலைமையில் தற்போது கத்தார் மற்றும் ஓமன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த கூடாது என்று வலியுறுத்தி வருகின்றன.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஜனவரி 13 அன்று வெளியிட்ட தகவலின்படி, வளைகுடா நாடுகள் டிரம்ப் நிர்வாகத்திடம் தாக்குதல் திட்டங்களை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது. டிரம்ப் நேற்று வெளியிட்டுள்ள சமுக வளைத்தள பதிவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானியர்களை தொடர்ந்து போராடுமாறு வலியுறுத்தியுள்ளார். உங்களுக்கான "உதவி வருகிறது" என்று பதிவிட்டு உள்ளார்.
இதற்கு மத்தியில் தான் வளைகுடா நாடுகள் டிரம்ப் நிர்வாகத்தை ஈரானில் தாக்குதல் நடத்த கூடாது என அடுத்துடுத்து கோரிக்கையை விடுத்து வருகின்றன.
ஈரான் மக்கள் போராட்டம் குறித்து வளைகுடா நாடுகள் தொடர்ந்து அமைதி காத்து வந்த நிலையிலும், அமெரிக்கா இந்த போராத்திற்கு சப்போர்ட் செய்து வருகின்றன. ஆனால் அமெரிக்காவின் தலையீடு மூலம் ஈரான் நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தால் கச்சா எண்ணெய் சந்தையை கடுமையாக பாதிக்கும் என்று வளைகுடா நாடுகள் அஞ்சுகின்றன.
இது அமெரிக்க பொருளாதாரத்துக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று வளைகுடா அதிகாரிகள் அமெரிக்க அரசுக்கு தெரிவித்துள்ளனர். முக்கியமாக, இந்த தாக்குதல் வளைகுடா பிராந்தியத்தில் எதிர்பாராத வளைவுகள் ஏற்படும் அச்சம் வளைகுடா நாடுகளுக்கு உள்ளது.

கத்தாரின் அச்சமும் எச்சரிக்கையும்
கத்தார் அரசு அமெரிக்கா-ஈரான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டால் வளைகுடா பிராந்தியத்துக்கு பேரழிவு ஏற்படும் என்று செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளது. இந்த நிலையில் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் Majed al-Ansari கூறுகையில், "எந்தொரு போர் தாக்குதல் நடந்தாலும் இப்பிராந்தியத்தை தாண்டி பெரிய அளவிலான பேரழிவு சர்வதேச அளவில் ஏற்படுத்தும். அதை முடிந்தவரை தவிர்க்க விரும்புகிறோம்" என கூறினார்.
இந்த நிலையில் புதன்கிழமை வெளியான தகவலின்படி, கத்தாரில் உள்ள al-Udeid விமான தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவ ஊழியர்கள் இன்று மாலைக்குள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் எச்சரிக்கை
வளைகுடா நாடுகளை போல் ரஷ்யாவும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ தாக்குதல் அச்சுறுத்தல்களை "முற்றிலும் ஏற்க முடியாதவை" என்று ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. ஈரான் அரசியலில் அமெரிக்காவின் தலையீடு "அழிவு ஏற்படுத்தும் முயற்சி" என்று ரஷ்யா விமர்சித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சக அறிக்கையில், அமெரிக்கா மத்திய கிழக்கில் ஏற்படுத்தும் அபத்தான செயல்களுக்கு கட்டாயம் பின்வளைவுகள் இருக்கும் என்பதை உணர வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கைகள் உலக எண்ணெய் சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. சவுதி அரேபியா தலைமையிலான வளைகுடா நாடுகளின் நிலைப்பாடு அமெரிக்காவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications