2020-ல் 86% பொருளாதார வளர்ச்சி காண இருக்கும் நாடா..? யார் அந்த அதிர்ஷ்டசாலி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

: உலக பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கிறது. சீனா இந்தியா போன்ற, கடந்த சில வருடங்களில் அசுர வளர்ச்சி கண்ட நாடுகள் கூட இப்போது 6 - 7 சதவிகித வளர்ச்சிக்கு தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி ஒரு சூழலில் ஒரு நாடு அடுத்த ஆண்டில் 86 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி அடையும் அல்லது அடையப் போகிறது என்று சொன்னால் நம்புவீர்களா..? நம்பித்தான் ஆக வேண்டும்.

உண்மையிலேயே ஒரு நாடு, அடுத்த 2020-ம் வருடம் சுமாராக 86 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி காண இருக்கிறது. அந்த நாட்டின் பெயர் குயானா (Guyana).

ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சத்தமேயில்லாமல் வட்டி குறைப்பு..!ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சத்தமேயில்லாமல் வட்டி குறைப்பு..!

எல்லைகள்

எல்லைகள்

குயானா நாட்டின் வடக்கு பகுதி எல்லையாக வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், தெற்கு எல்லையாக வளமான மற்றும் பெரிய நாடான பிரேசில் இருக்கின்றன. மேற்கு எல்லைகளை வெனிசுலாவும், ரோமானியாவும் பகிர்ந்து கொள்கிறார்கள். கிழக்கு எல்லையை சுரிநெம் (Suriname) என்கிற நாட்டுடன் பகிர்ந்து கொள்கிறது நம் குயானா.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

தென் அமெரிக்காவில் இருக்கும் பல நாடுகள் ஆங்கிலத்தை தன் அதிகாரபூர்வ அலுவல் மொழியாக வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் நம் குயானா (Guyana) நாட்டின் அதிகாரபூர்வ அலுவல் மொழி ஆங்கிலம். மேலே சொன்ன எல்லை நாடுகளில் ஆங்கிலம் பயன்படுத்தாமல் ஸ்பானிஷ், பிரெசிலியா... என பல மொழிகளை அந்தந்த நாடுகளில் அதிகாரபூர்வ மொழிகள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ எம் எஃப் கணிப்பு
 

ஐ எம் எஃப் கணிப்பு

இந்த ஆண்டு குயானா (Guyana) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால் அடுத்த ஆண்டு 86 சதவிகிதமாக இருக்கு எனக் கணித்து இருக்கிறது சர்வதேச பன்னாட்டு நிதியமான ஐ எம் எஃப். தற்போது ஐ எம் எஃப் கணித்து இருக்கும் இந்த பொருளாதார வளர்ச்சி சீனாவின் வளர்ச்சியை விட சுமார் 14 மடங்கு அதிகம். இப்போதும் கச்சா எண்ணெய் இருக்கும் நாடு தான் பிஸ்தாவா..?

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

குயானா (Guyana) நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பதை கடந்த 2015-ல் தான் கண்டு பிடித்தார்கள். அதன் பிறகு தான் இந்த நாட்டு பொருளாதாரமும் பெரிய அளவில் மேம்படும் எனப் பேசத் தொடங்கினார்கள். குயானாவுக்கு அருகில் இருக்கும் வெனிசுலாவில் தான் உலகிலேயே அதிக எண்ணெய் வளம் இருக்கும் நாடு என்பதும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.

அமெரிக்க நிறுவனம்

அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவின் எக்ஸான் மொபில் கார்ப்பரேஷன் என்கிற எண்ணெய் எடுப்பதில் நல்ல அனுபம் கொண்ட நிறுவனம் தான், குயானா எண்ணெய் வயல்களில் இறங்கி கச்சா எண்ணெய் எடுக்கப் போகிறது. ஆகையால் தான் கச்சா எண்ணெய்யால் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி அசுரத் தனமாக வளர இருப்பதாகச் சொல்லி இருக்கிறது ஐ எம் எஃப்.

அரசு தரப்பு

அரசு தரப்பு

குயானா அரசின் நிதி அமைச்சராக இருக்கும் வின்ஸ்டன் ஜோர்டன், ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் "எங்கள் நாட்டின் பொருளாதாரம் மிகவும் கீழ் நிலையில் இருந்து ஒரு பெரிய உயரத்துக்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது" என மிகவும் பெருமையாகச் சொல்லி இருக்கிறார். 86 சதவிகித வளர்ச்சி என்றால் மகிழ்ச்சியாக இருக்காதா என்ன..?

4 - 14 பில்லியன் டாலர்

4 - 14 பில்லியன் டாலர்

தற்போது குயானா நாட்டின் ஜி டி பி சுமாராக 4 பில்லியன் டாலர் தானாம். ஆனால் வரும் 2024-ம் ஆண்டுக்குள் நம் குயானா நாட்டின் ஜி டி பி சுமார் 15 பில்லியன் டாலர் வரைத் தொடும் எனக் கணித்து இருக்கிறது சர்வதேச பன்னாட்டு நிதியம் (ஐ எம் எஃப்).

என்ன செய்ய இருக்கிறார்கள்

என்ன செய்ய இருக்கிறார்கள்

கச்சா எண்ணெய் வியாபாரம் வழியாக கிடைக்கும் பணத்தை வைத்து, கடலோர நகரங்களுக்கு நல்ல சாலை போடப் போகிறார்களாம். எதற்கு என்று கேட்டால், அந்த கடலோர நகரங்களில் தங்கம், வைரம் மற்றும் பாக்ஸைட் தாதுக்கள் கிடைக்கிறதாம். அடுத்த ஐந்து வருடத்துக்குள் குயானா நாட்டின் 40% பொருளாதாரம் கச்சா எண்ணெய்யை நம்பி இருக்குமாம். எப்படியோ நல்லபடியாக முன்னேறினால் சரி. அதிக பணம் சம்பாதிக்க இருக்கும் குயானா நாட்டுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Guyana is going to see 86 percent economic growth

The south American country Guyana has oil reserves. Through crude oil, they are going to develop at least three times of their economy. Next year they are going to see 86 percent economic growth
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X