5 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக எச்-1பி விசா விண்ணப்ப மோகம் குறைந்தன..!

5 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக எச்-1பி விசா விண்ணப்ப மோகம் குறைந்தன..!

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு எச்-பி விசா குறித்துத் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

எச்-1பி விசா விண்ணப்பம் ஒவ்வொரு ஆண்டும் 2,00,000 அதிகமாக விண்ணப்பம் பெறுவது வழக்கம். 2014 ஆண்டு முதல் இது வரை 2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களையே பெற்று வந்த அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு இந்த ஆண்டு வரம்பை விடக் குறைவான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது ஆச்சிரயத்தை ஏற்படுத்தியுள்ளது.

எச்-1பி விசா ஆண்டுக்குக் குறைந்தது 85,000 நபர்களுக்கு அளிப்பது வழக்கம். அதில் 20,000 எச்-1பி விசாக்கள் மட்டுமே முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, பிற விசாக்கள் விண்ணப்பதாரரின் தேவை அறிந்து வழங்குவது வழக்கம்.

விண்ணப்பங்களின் எண்ணிக்கை

விண்ணப்பங்களின் எண்ணிக்கை

2017-ம் ஆண்டிற்கான எச்-1பி விசா விண்ணப்பம் ஏப்ரல் 3-ம் தேதி வரை பெறப்பட்டது, அப்போது 199,000 விண்ணப்பங்கள் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு பெற்றுள்ளது. இதுவே 2016-ம் ஆண்டு 236,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தது.

2013-ம் ஆண்டிற்குப் பிறகு உயர்ந்துகொண்டே போன எச்-1பி விசா விண்ணப்பம் இந்த 2017-ம் ஆண்டுக் குறைந்து இருக்கின்றது.

 

எச்-1பி விசா

எச்-1பி விசா

எச்-1பி விசா அதிகத் திறன் உடைய ஊழியர்களுக்காக அமெரிக்காவில் வந்து பணிபுரிய வழங்கப்படும் விசா ஆகும், ஆனால் அதற்குள் நிறை கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் உண்டு. அமெரிக்கர்களில் வேலையை எச்-1பி விசா பரிக்கின்றது என்று, டிரம்ப் அரசு கொண்டு வந்துள்ள பல சட்டங்களும் எச்-1பி விசா மீதான எதிர்ப்பும் விண்ணப்பங்கள் குறைந்ததற்குக் காரணம் என்று கூறலாம்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

சில நேரங்களில் அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்கள் அமெரிக்கர்களைப் பணியில் இருந்து நீக்கிவிட்டு அதிகத் திறன் உடையவர்களைக் குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து அமர்த்துகின்றனர் என்றும் இதனால் அமெரிக்கர்களும் வேலை வாய்ப்பிற்குப் பாதிப்பு ஏற்படுகின்றது என்று குற்றச்சாட்டும் உண்டு.

ஆச்சர்யம் இல்லை பெட்சி லாரன்ஸ்

ஆச்சர்யம் இல்லை பெட்சி லாரன்ஸ்

எச்-1பி விசா விண்ணப்பங்கள் குறைந்தது குறித்துக் கருத்து தெரிவித்த அமெரிக்கக் குடிவரவு வழக்கறிஞர்கள் சங்கம் அரசாங்கம் தொடர்புகளுக்கான இயக்குநர் பெட்சி லாரன்ஸ் இது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள் பல அமெரிக்காவின் புதிய எச்-1பி விசா கட்டுப்பாடுகளினால் விசாவிற்கு விண்ணப்பிப்பதைக் குறைக்கப் போவதாகவும், அதற்குப் பதிலாக அமெரிக்கர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளன.

விண்ணப்பம் குறைந்தாலும் ஒன்றும் இல்லை

விண்ணப்பம் குறைந்தாலும் ஒன்றும் இல்லை

எச்-1பி விசா விண்ணப்பத்திற்கான விண்ணப்பங்கள் குறைந்து இருந்தாலும் என்ன இருக்கின்றது அனுமதிக்கும் அளவை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கின்றன லாரன்ஸ் கூறினார்.

செலவுகளைக் குறைக்கும் நிறுவனங்கள்

செலவுகளைக் குறைக்கும் நிறுவனங்கள்

சென்ற ஆண்டு அதிகமாக விண்ணப்பித்து நிறைய ஊழியர்களுக்கு எச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்தும் விசா கிடைக்கவில்லை. அதனால் ஏற்படும் கூடுதல் செலவுகளைக் குறைக்கவும் நிறுவனங்கள் விண்ணப்பிப்பதைக் குறைத்து இருக்கலாம்.

பிரீமியம் விசா

பிரீமியம் விசா

இந்த ஆண்டுப் பிரீமியம் விசா விண்ணப்பங்களுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, 1,225 டாலர்கள் கூடுதல் கட்டணமாகச் செலுத்தி எச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்தால் 15 நாட்களில் ப்ரீமியம் விசா பெற்று விட முடியும்.

நான் பிரீமியம் விசா

நான் பிரீமியம் விசா

பிரீமியம் விசாவிற்குக் கட்டணம் செலுத்தாதவர்கள் 8 மாதங்கள் வரை காத்திருப்பில் இருக்கும் நிலையில் மட்டுமே அனைத்துப் பணிகளும் முடிந்து விசா பெறுவதற்குக் குடியேற்ற அதிகாரிகள் அனுமதிப்பார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+