உலகின் மிகவும் பிரபலமான அமெரிக்க வேலை வாய்ப்பு விசாவான எச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பது 2017-ம் ஆண்டு முதன் முறையாகச் சரிந்த நிலையில் 2018-ம் ஆண்டும் சரிந்துள்ளது.
அமெரிக்கக் குடிவரவு துறை சேவைகளானது 2018-ம் ஆண்டு 1,90,098 எச்-1பி விசா விண்ணப்பங்களைத் தற்போது பெற்றுள்ளது, இதுவே 2017-ம் ஆண்டு 1,99,000 விண்ணப்பங்களைப் பெற்று இருந்தது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு சென்ற ஆண்டுத் தான் 2,00,000 குறைவான விசா விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
எச்-1பி விசா வரம்பு
எச்-1பி விசாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து எவ்வளவு நபர்கள் விண்ணப்பித்தாலும் 85,000 விசக்கள் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும். அதில் 20,000 விசாக்கள் முதுகலை பட்டாதாரிகளுக்கு ஒதுக்கப்படும்.
எச்-1பி விசா என்றால் என்ன?
எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்களால் வெளிநாட்டில் இருந்து திறன் படைத்த ஊழியர்களைப் பணிக்கு எடுக்க முடியும். இது ஒரு தற்காலிக வேலை விசாவாகும். இதன் மூலம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் சென்று வேலை செய்ய முடியும்.
லாட்டரி முறை
எப்போதும் போன்று இந்த ஆண்டும் தேவைக்கு அதிகமாக எச்-1பி விசா விண்ணப்பங்கள் வந்துள்ளதால் லாட்டரி முறையில் தான் அளிக்கப்படும்.
கடுமையாகும் விதிகள்
அமெரிக்க அரசு ஒரு பக்கம் எச்-1பி விசா விதிமுறைகளைக் கடுமை படுத்தி வரும் நிலையில் விசாவிற்கான விண்ணப்பங்களும் குறைந்து வருகிறது.
புதிய முடிவு
2018-ம் ஆண்டுக்கான எச்-1பி விசா விண்ணப்பங்கள் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பெறப்பட்ட நிலையில் சிறு பிழை இருந்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நிறுவனங்கள் மீது நடவடிக்கை
அதுமட்டும் இல்லாமல் எச்-1பி விசா பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களை அதிகளவில் எடுக்க முயலும் நிறுவனத்தின் மீது குடியேற்ற எதிர்ப்புக் கொள்கையினை அமல் படுத்தவும் டிரம்ப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா - சீனா
உலகளவில் எச்-1பி விசாவிற்கு இந்தியர்கள் தான் அதிகளவில் விண்ணப்பிப்பதாகவும், அதற்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளதாகவும் சென்ற வருடம் அமெரிக்க அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications