சில வருடங்கள் முன்பு செஷன்ஸ் மற்றும் கிராஸ்லீ இருவரும் இணைந்து H1B விசா மீது கொண்டு வந்த சட்டங்கள் இந்திய ஐடி நிறுவனங்களை அதிரவைத்தது. தற்போது இச்சட்டங்கள் விரைவாக அமல்படுத்த உள்ளதாக டிரம்ப்.....
வாஷிங்டன்: இந்திய ஐடி தொழில் நிபுணர்கள் பெரிதும் பயன்படுத்தும் எச்1பி விசா மோசடிகளுக்கு எதிரான தடை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நியமித்த அட்டர்னல் ஜெனரல் உறுதி அளித்துள்ளார்.
நாம் திறந்த உலகத்தில் உள்ளோம் என்று நினைப்பது தவறானது, அமெரிக்க மக்களுக்கு சொந்தமான வேலைவாய்ப்பை பிடுங்கி வேறு நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, குறைந்த ஊதியத்தில் அளிப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்க அட்டர்னி ஜெனரல் செனேட்டர் ஜெஃப் செஷன்ஸ், செனட் நீதித்துறைக் குழு உறுப்பினர்களுடன் கூறியுள்ளார்.
நமக்கும் ஒரு எல்லை உண்டு. நமது நாட்டின் குடிமக்களின் மீது நமக்குப் பொறுப்பு வேண்டும் என்றும் இதற்காக உங்களுடன் இணைந்து செயலாற்ற நான் தயார் என்றும் செனட் நீதித்துறைக் குழுவின் தலைவர் செனட்டர் சார்லஸ் கிராஸ்லீயின் கேள்விக்குப் பதில் அளிக்கும் போது செஷன்ஸ் தெரிவித்துள்ளார். சில வருடங்கள் முன்பு செஷன்ஸ் மற்றும் கிராஸ்லீ இருவரும் இணைந்து H-1B விசா மீது கொண்டு சட்டங்கள் இந்திய ஐடி நிறுவனங்களை மோசமாகப் பாதித்தது. நீதித்துறையில் உள்ள குடியேற்றம் தொடர்பான நியாயமற்ற வேலைவாய்ப்புப் பயிற்சிகள் சிறப்பு ஆலோசனை அலுவலகம் அமெரிக்கச் செனேட் உடனான செஷன்சின் உரையாடல் பற்றி உறுதி அளித்துள்ளது. இந்த அலுவலகம் குடியேற்றம் மற்றும் குடியுரிமை சட்டம் விரோத பாகுபாடு விதிகளை அமல்படுத்தும். அயல் நாட்டில் இருந்து வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது எச்1பி மற்றும் எல்1 விசா போன்றவற்றைப் மோசடி இன்றிக் கவனித்துக்கொள்ளவே குடியேற்றம் தொடர்பான நியாயமற்ற வேலைவாய்ப்புப் பயிற்சிகள் சிறப்பு ஆலோசனை அலுவலகம் வடிவமைக்கப்பட்டது. இந்த அலுவலகம் அமெரிக்கர்கள் அல்லாதவர்களைப் பணிக்கு அமர்த்தும் போது இதற்கு முன்பு அந்தப் பணியில் இருந்தது அமெரிக்கரா அவர் எதற்காக வெளியேற்றப்பட்டார், அந்த வேலைக்கு என்ன பாகுபாடு என்பதை உறுதி செய்யும். பல அமெரிக்கர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எச்-1பி விசாம் மூலம் குறைவான சம்பளத்தில் வெளிநாட்டவர் அந்தப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகும் இது அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எதிராக நடைமுறையில் உள்ள தேசிய அடிப்படையிலான பாகுபாடு என்றும் கிராஸ்லீ கூறினார். ஒபாமா தலைமையிலான நிர்வாகம் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பைப் பாதுகாப்பதில் தோல்வியுற்றது. இந்த விசா நிகழ்வுகள் குறித்த விசாரணையை ஏற்க நீங்கள் தாயாரா? என்று ஒபாவின் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினார். அதிகத் திறமையான வேலை வாய்ப்பை அயல் நாட்டினர் ஒருவருக்கு அளிக்கும் முன்பு தகுதியான அமெரிக்க ஊழியர்களைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அப்படி ஏதும் முடியாத பட்சத்தில் தான் எச்-1பி விசா பயன்படுத்திப் பிறரை அனுமதிக்க வேண்டும் என்று செஷன்ஸ், கிராஸ்லே மற்றும் செனட்டர் டிக் டர்பின் ஆகியோர் இணைந்து மசோதா ஒன்றை முன்பு உருவாக்கி இருந்தனர். அமெரிக்க ஊழியர்களுக்காக நிறையப் பாதுகாப்பை அளிக்க முயற்சித்து வருகின்றோம் என்றும், வெளிநாட்டில் இருந்து ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் முன்பு இங்கு உள்ள மக்களைப் பணிக்கு அமர்த்தச் சிறப்பான முயற்சிகளை எடுப்பதாகவும் வெளிநாட்டில் இருந்து ஊழியர்களை இறக்க நாங்கள் இதற்காக அரசுடன் இணைந்து ஊழியர்களின் விவரங்களைத் தணிக்கை செய்யவும் அனுமதித்துள்ளதாக ஏஎப்எல் நிறுவன சிஐஓ தெரிவித்தார். ஒபாமாவின் நிர்வாகத்திற்குத் தெற்கு கலிபோர்னியா எடிசன், டிஸ்னி மற்றும் ஐபிஎம் நிறுவனங்களில் அமெரிக்கர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு எச்-பி1 விசா மூலம் ஆட்கள் எடுக்கப்பட்ட விவரங்களை அளித்து விசாரணை நடத்தக் கோரிக்கை வைத்ததாகவும் கிராஸ்லீ கூறினார்.
எல்லை உண்டு
முன்பு ஏற்பட்ட பிரச்சனைக்கும் இவர்கள் தான் காரணம்
பாகுபாடு விதிகள்
விசா மோசடி கவனிப்பு
கிராஸ்லீ கருத்து
ஒபாமா நிர்வாகத்தின் தோல்வி
எச்-1பி விசாவிற்கு முன்பு இருந்த விதிமுறை
ஏஎப்எல் நிறுவன சிஐஓ கருத்து
ஒபாமாவின் நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்ட கோரிக்கை
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications