ட்ரம்பின் H4 விசா ரத்தினால் இத்தனை பிரச்சனைகளா? பாவம் இந்தியர்கள்!

சமீபத்தில் தான் டொனால்ட் ட்ரம்ப், வேலை வாய்ப்பு தொடர்பான விசாக்களில் பலவற்றை, இந்த ஆண்டு இறுதி வரை தடை செய்தார்.

Recommended Video

Trump அதிரடி முடிவு... யாருக்கு என்ன பாதிப்பு?

அதில் H4 என்கிற விசாவும் அடக்கம். H1B விசா தெரியும். அது என்ன H4 விசா..?

இந்த விசாவை ரத்து செய்ததால், யாருக்கு என்ன பிரச்சனை. இந்த விசாவுக்கு இந்தியர்களுக்கு என்ன நெருக்கம்? வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் H4 விசா என்றால் என்ன என்பதில் இருந்து தொடங்குவோம்.

H4 விசா

H4 விசா

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் விசா ஹெச் 1 பி விசா. அமெரிக்காவின் ஹெச் 1 பி விசாவில் ஒருவர் அமெரிக்கா வந்துவிட்டார் என வைத்துக் கொள்வோம். அவரின் கணவன் அல்லது மனைவி ஆகியோர்கள், அமெரிக்கா வர பயன்படுத்தப்படும் விசா தான் இந்த H4 விசா. கடந்த 2019-ம் ஆண்டில் சுமாராக 1.25 லட்சம் H4 விசாக்கள் வழங்கப்பட்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இவர்களுக்கு என்ன பிரச்சனை

இவர்களுக்கு என்ன பிரச்சனை

இப்போது, H4 விசா வைத்திருக்கும் ஒருவர் இந்தியாவில் இருந்தால், இனி 2020-ம் ஆண்டு முடியும் வரை மீண்டும் அமெரிக்காவுக்குப் போக முடியாது. குழந்தைகள் கூட தங்கள் கல்வியை வழக்கம் போலக் கற்க முடியாது. இது தான் ட்ரம்ப் விசா ரத்தால் வந்திருக்கும் பெரிய பிரச்சனை.

உதாரணம் 1

உதாரணம் 1

ஒரு இந்தியப் பெண், கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் கணவர் ஐடி துறையில் வேலை பார்க்கிறார். அவருக்கு H4 விசா நீட்டிப்புகள் எல்லாம் இருக்கின்றன. அவர் தற்போது இந்தியாவுக்கு வந்தவர் கொரோனாவால் திரும்பிப் போக முடியவில்லை. இப்போது ட்ரம்பின் விசா ரத்தினால் திரும்பிப் போக முடியவில்லை.

ஸ்டாம்பு இல்லை

ஸ்டாம்பு இல்லை

அந்தப் பெண், மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டுமானால், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அல்லது கவுன்சலேட்டில் இருந்து விசா அனுமதி பெற வேண்டும். அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டில் ஒரு ஸ்டாம்பு அடித்து அனுமதி கொடுப்பார்கள். இப்போது ட்ரம்பின் உத்தரவாலும், கொரோனாவாலும், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விசா பெற முடியாமல் இந்தியாவிலேயே தங்கி இருக்கிறார். இப்படி பல குடும்பங்கள், தனித் தனியாக பிரிந்து தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் ட்ரம்ப் அறிவித்த அந்த விசா ரத்து நீட்டிப்பு தான்.

அறிவுரைகள்

அறிவுரைகள்

H4 விசாக்களை மட்டும் வைத்துக் கொண்டு அமெரிக்காவில் வேலை பார்க்க முடியாது. H4 விசா வைத்திருப்பவர்கள் வேலை பார்க்க வேண்டும் என்றால், தனியாக அமெரிக்க அரசு தரப்பிடம் இருந்து Employment Authorisation Document (H-4EAD) பெற வேண்டும். எனவே ஹெச் 4 ரக விசாக்களை அனுமதிக்குமாறு சிலர் அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்க அரசு காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+