வாஷிங்டன், அமெரிக்கா: காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது . இந்தப் போர் காஸாவில் பலரது உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது. அன்றாட உணவு, குடிநீர், இருப்பிடம் என எதுவும் கிடைக்காமல் காஸா மக்கள் தவித்து வருகின்றனர்.
இஸ்ரேல் தொடர்ச்சியாக காஸா மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதலை நடத்துகின்றனர். இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காஸாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு , குடிநீர் உள்ளிட்டவை கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அன்றாடம் காஸாவிலிருந்து வெளிவரக்கூடிய புகைப்படங்களும் வீடியோக்களும் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த சூழலில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்கா தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அமைதி பேச்சு வார்த்தையில் ஹமாஸ் படையினர் எந்த ஆர்வமும் காட்டவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார். அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதலே உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு போர்களை முடிவுக்கு கொண்டு வருவேன் என கூறி வருகிறார் .
அந்த வகையில் கத்தாரில் அமெரிக்கா முன்னிலையில் இஸ்ரேல் ஹமாஸ் குழுவினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ஹமாஸ் தன் வசம் இருக்கும் பிணைக்கைதிகளை விட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன. பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட பின் காஸாவினுள் நிவாரண உதவிகள் அனுமதிக்கப்படும் என இஸ்ரேல் கூறுகிறது.

இதனிடையே காஸாவில் அமெரிக்கா தெரிவித்த போர் நிறுத்த திட்டத்தை ஹமாஸ் படையினர் நிராகரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கும் டிரம்ப் ஹமாஸ் படை காஸாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை எனக் கூறியிருக்கிறார். உண்மையில் ஒரு அமைதி ஒப்பந்தம் செய்ய அவர்கள் விரும்பவில்லை, அவர்கள் இறக்க விரும்ப விரும்புகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன் இது மிக மிக மோசமானது, அவர்கள் அழிய வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
அனைத்து பிணை கைதிகளையும் விடுவித்த பிறகு என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும் இதனால் பிணை கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தங்களை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் போராடி தான் தன்னுடைய வேலையை முடிக்க வேண்டி இருக்கும் என டிரம்ப் கூறி இருக்கிறார். மேலும் ஹமாஸ் படையினர் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறி விட்டனர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் .
முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் கத்தாரில் ஹமாஸ் படையினரோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஹமாஸ் படையினர் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறி கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். கடந்த வாரம் கண்டிப்பாக ஹமாஸுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என நம்பிக்கையுடன் தெரிவித்த டிரம்ப் இந்த வாரம் நிலைபாட்டை மாற்றி இருக்கிறார்.
More From GoodReturns

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

Israel ரத்த வெள்ளம், Iran குறிவைத்த அணுசக்தி தளம்! முடங்கிய Iron Dome - அதிர்ச்சியில் நெதன்யாகு சொன்ன வார்த்தை

கனடா, கிரீன்லாந்து வேலைக்கு ஆகல.. இப்போ வெனிசுலா-வை இழக்கும் டிரம்ப்.. அதென்ன #51..?!

குறிவைத்து அடித்த ஈரான்.. 3 இஸ்ரேல் விமானங்கள் நொறுங்கியது..!!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்



Click it and Unblock the Notifications