ரூ.4 லட்சம் செலவு வைத்த பூனை.. பணம் பெரிதில்லை.. பாசம் தான் பெரிது.. பூரிப்பில் கிர்ஸ்டி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலாந்து : எந்த ஒரு செல்ல பிராணியாக இருந்தாலும் அதன் மீது அதீத காதலும் பாசமும் வைப்பதில் வெளி நாட்டினரை யாரும் மிஞ்ச முடியாது. அப்படியொரு பாசமும் காதலும் கொண்டு வளர்ந்து வந்த பூனை தான் ஹாட்டி. அப்படி செல்லமாக வளர்க்கப்பட்ட பூனையை இரண்டு வாரங்களுக்கு முன்பு காணமல் போய்விட்டதாம்.

 

அட ஆமாப்பு.. கிர்ஸ்டி பாசமா வளர்த்த பூனைக் குட்டி காணமா போயிடுச்சாம். இதனால் மனமுடைந்த கிர்ஸ்டி தனது காதலி ஹாட்டியை கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும் புலம்பியுள்ளார். அதோடு பேஸ்புக்கில் தனது நண்பர்களுடன் சோகத்தை பகிந்துள்ளார்.

 
ரூ.4 லட்சம் செலவு வைத்த பூனை.. பணம் பெரிதில்லை.. பாசம் தான் பெரிது.. பூரிப்பில் கிர்ஸ்டி

அதோடு யாரோ ஒருவர் ஒரு வாரங்களாகவே Tamar from Devon to Cornwall நதி வழியாக செல்லும் brunel bridge மீது ஒரு பூனை சிக்கித் கொண்டுள்ளதாகவும், அது கீழே வர முடியாமல் 5 நாட்களாக தவித்து வருவதாகவும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் அது நம்ம் ஹாட்டியாக இருக்குமோ என்ற சந்தேகம் வர, கிர்ஸ்டி அங்கு சென்று பார்த்துள்ளார். பாசமாக வளர்த்த பூனையல்லவா?அதான் பார்த்ததும், சிக்னல் கொடுத்துள்ளது. பாவம் பசியால் கத்தியுள்ளது போலும்.

இந்த நிலையில் கிர்ஸ்டிக்கு அது தனது காதலியான ஐந்து வயதுடைய பூனைதான், ஹாட்டி என்று தான் உறுதி செய்து கொண்டு பின்னர் ரயில்வே துறையை நாடியுள்ளார். ஆமாப்பு ஒரு நாளைக்கு பல ரயில்கள் கடந்து செல்லும் அந்த பாலத்தின் மீது, கொஞ்ச நேரத்திற்கு நிறுத்தி வைக்க அனுமதியும் கொடுக்கப்பட்டதாம்.

அதோடு தீயனைப்பு துறையையும் தொடர்பு கொண்டு தனது பூனையை காப்பாற்றும் படி கதறியுள்ளார். தீயனைப்பு வீரர்களும் ஐந்து மணி நேரமாக போராடியும் காப்பாற்ற முடியாமல் போகவே, அடுத்த நாள் நிச்சயம் காப்பாற்றி விடுவதாகவும் கூறியுள்ளனர்.

இதற்காக இரயில் போக்குவரத்தையும் கூட கொஞ்ச நேரம் நிறுத்த சொல்லி அனுமதியும் வாங்கியுள்ளனர். உண்மையிலேயே தனது செல்லப்பிரானி காதலியுமான ஹாட்டி மிக இளைத்து விட்டாள். பாவம் ஆறு நாட்களாக உணவு இல்லாமல் எப்படி ஆறு நாட்களாக இருந்திருப்பாள் என்ற மிகுந்த கவலையுடனேயே உறங்கியிருக்கிறார் கிர்ஸ்டி.

இதற்காக சுமார் 5000 பவுண்டுகளையும் செலவு செய்துள்ளார் கிர்ஸ்டி. அட ஆமாப்பு இந்திய ரூபாயில் சுமார் 4 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளாராம். எனினும் பணம் பெரிதல்ல எனது காதலி எனக்கு திரும்ப கிடைத்தால் போதும் என்று கடவுளை வேண்டியுள்ளாராம்.

இதோடு அடுத்த நாள் உயிரோடு காப்பாற்றப்பட்ட ஹாட்டிக்கு முத்தத்தினையும் வாரி வழங்கி சந்தோஷமடைந்துள்ளார். அதோடு பேஸ்புக்கில் ஹாட்டியின் போட்டைவை போட்டு பதிவிட்ட நபருக்கும், அதோடு பேஸ்புக்கு குழுவுக்கும், தீயனைப்பு வீரர்களுக்கும், ஏன் ரயில்வே துறைக்கும் நன்றி கூறியுள்ளாராம் கிர்ஸ்டி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: money
English summary

Hatty the cat stranded on Brunel Bridge for six days

Hatty is a lucky cat, who was believed to have been trapped on the Royal albert bridge for six days. There was a five-hour failed rescue mission from firefighters, also countless visits from RSPCA inspectors, and also arrangements in place for the train lines to be closed.
Story first published: Friday, May 31, 2019, 10:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X