உலகின் டாப் 30 சிஇஓ பட்டியலில் 3 இந்தியர்கள்..!

உலகின் டாப் 30 சிஇஓ பட்டியலில் 3 இந்தியர்கள்..!

அமெரிக்காவின் வணிகப் பத்திரிக்கையான பரோன் உலகின் டாப் முப்பது சிஇஓ-க்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதன் முறையாக 5 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்தியர்களான எசிடிஎப்சி நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரி, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா மற்றும் அடோப் நாராயென் பற்றி இங்குப் பார்ப்போம்.

ஆதித்யா பூரி

ஆதித்யா பூரி

எச்டிஎப்சி வங்கி நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரி உலகின் மிகத் தரமான வங்கி சேவையை அளித்து வருவதாகவும், இதனால் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தனியார் வங்கி சேவையாகக் குறைந்த காலத்திலேயே எசிடிஎப்சி அடைந்துள்ளதாகப் பத்திரிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்லா ரூபாய் நோட்டு விவகாரம்

செல்லா ரூபாய் நோட்டு விவகாரம்

இந்திய அரசு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 86 சதவீத பயன்பாட்டில் இருந்து ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்த பிறகு இது தேவையில்லாத ஒன்று என்றாலும் தான் அரசுடன் நல்ல ஒத்துழைப்பை அளித்தார்.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தது நல்லது என்றும், நான் அதன் விளைவு பற்றி மிகவும் நேர்மறை இருக்கிறேன், இதனால் பல சிக்கல்கள் இருந்தாலும் இவை விரைவில் நீங்கும் என்று தான் நம்புவதாக அடுத்த மாதமே தனது கருத்தைத் தெரிவித்தார் 66 வயதான ஆதித்யா பூரி.

துவக்கத்தில் பல சிக்கல் இருந்த போதிலும் பின்னர் நல்ல முன்னேற்றம் இருந்ததை இவர் ஒப்புக்கொண்டார் என்று கூறலாம்.

இப்போது வங்கிகளில் நிறையப் பணம் இருக்கின்றது, வட்டி விகிதமும் குறைந்துள்ளது, இதனால் வங்கி அமைப்பில் மேலும் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தார்.

 

பேடிஎம்

பேடிஎம்

இந்தியாவின் மிகப் பெரிய மின்னணு வாலெட் சேவை அளித்து வரும் பேடிஎம் பற்றிக் கருத்து தெரிவித்த இவர் இது போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிறையக் கேஷ் பேக் ஆஃபர்கள் வழங்குவதால் நட்டம் அடையும் என்றும், எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் கூறினார்.

வாலெட் வர்த்தகத்தில் பெரிதாக லாபம் இல்லை என்றும், 500 ரூபாய்க்கு 250 ரூபாய் கேஷ் பேக் அளிப்பதில் ஒரு லாபமும் இல்லை என்று ஆதித்யா பூரி தனது கருத்தை தெரிவித்தார்.

 

சத்ய நாதெல்லா

சத்ய நாதெல்லா

மைக்ரோசாப்ட்டின் எதிர்காலம் மிக மோசமான நிலையில் இருந்த போது 49 வயதான சத்ய நாதெல்லா தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார் என்றும், இவர் எடுத்த பல அதிரடி முடிவுகளால் மைக்ர்சாப்ட் புதிய பாதையில் செல்ல துவங்கிது என்றும், அதனால் தனது பிறாண்டின் மதிப்பை தக்கவைத்துக் கொண்டது என்றும் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

அடோப் நாராயென்

அடோப் நாராயென்

53 வயதான அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நாராயென் பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் விரைவில் அடோ பாக்ஸ்களில் செயலிகளை விற்பதைக் குறைக்கும் என்பதும் ஒன்றாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+