ரஷ்யாவில் தற்போது பனிக்காலம், வழக்கமாகவே பனிக்காலம் என்றால் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களிலும் பனிப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக தலைநகர் மாஸ்கோ மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பல்வேறு நகரங்களிலும் தொடர்ச்சியாக பனி கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அந்த நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரமாக இரவு பகல் மாறாமல் தொடர்ந்து பனி கொட்டிக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளன.

பாதைகள் எங்கு இருக்கிறது என்று கூட தெரியாத அளவிற்கு பனி கொட்டி கிடக்கிறது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை பட்டிருக்கிறது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் பனியால் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர்.
வீட்டு நுழைவாயில்களில் எல்லாம் பனி மூடியுள்ளதால் கதவை திறந்தாலே பனியை அகற்றிவிட்டு தான் வெளியே வர முடியும். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர்ச்சியாக பனி பெய்து வருவதாக ரஷ்ய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நிலைமை இன்னும் முழுமையாக சீராகவில்லை என்றும் இன்னும் சில நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என்றும் வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
21 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகக் கடுமையான பனிப்பொழிவுகளில் இதுவும் ஒன்று என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பனியை அகற்றும் வேலை ஒருபுறம் வேகமாக நடைபெற்று வந்தாலும் மற்றொருபுறம் பனி பெய்த வண்ணமே இருக்கிறது.
ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்கி தற்போது வரை பனிப்பொழிவு அங்கே நீடிக்கிறது. குறிப்பாக ரஷ்யாவின் கம்சத்கா பிராந்தியத்தில் மிக மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது. பனிப்புயல் காரணமாக நகரங்கள் முழுவதுமே பனியால் போர்த்தப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பொழிய வேண்டிய பனி சில நாட்களிலேயே கொட்டி தீர்த்து விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 6.5 அடிக்கு மேல் பனி குவிந்து கிடக்கிறது.
தற்போது இந்த பிராந்தியத்தில் அவசர காலநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது. இரண்டு பேர் வரை பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பல்வேறு இடங்களிலும் வாகனங்கள், குடியிருப்புகள் அனைத்தும் பனியில் சிக்கி இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் இருக்கின்றன.
புவி வெப்பமயமாதலால் பருவநிலை மாற்ற மாறுபாடுகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இதனால் தான் பல இடங்களில் வரலாறு காணாத வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக அதீத மழை, வெள்ளம், புயல், பனிப்பொழிவு , மறுபுறம் வறட்சி , போதிய மழையின்மை கடல் நீர் மட்டம் அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறோம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications