அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதலே வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக ஹெச்1பி விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை பணி அமர்த்த ஹெச்1பி விசா திட்டத்தைதான் பயன்படுத்துகின்றன. இந்த விசாவை அதிகளவில் பயன்படுத்துவது இந்தியாவை சேர்ந்த டெக் ஊழியர்கள் தான். தற்போது அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவை சேர்ந்த தொழில் நிபுணர்கள் அமெரிக்காவிற்கு செல்ல விசா பெறுவது பல்வேறு சிக்கல்கள் நிறைந்ததாக மாறி இருக்கிறது.

அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் 27% குறைந்து இருக்கிறதாம். அமெரிக்கா அதிபர் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் எடுக்கும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை உள்ளிட்டவை காரணமாக இந்தியாவை சேர்ந்த டெக் ஊழியர்கள் இவ்வகை விசாவிற்கு விண்ணப்பம் செய்வது படிப்படியாக குறைந்து வருவதாக இந்த துறை சார்ந்து இயங்கக்கூடிய ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன.
எனவே ஹெச்1பி விசாவுக்கு மாற்றாக வேறு என்னென்ன விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்கு செல்ல முடியும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். பலரும் L-1 மற்றும் O-1 விசாக்களுக்கு விண்ணப்பிக்க தொடங்கி இருக்கிறார்களாம்.
L-1 விசா : எல்-1 விசா என்பது தங்கள் நிறுவன ஊழியர்களை வெளிநாட்டிலிருந்து அமெரிக்க அலுவலகத்திற்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய விசா ஆகும். மேலாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் நிலையில் இருக்கக்கூடிய ஊழியர்களை நிறுவனங்கள் எல் 1 விசா மூலம் அமெரிக்காவிற்கு வேறு நாடுகளில் இருந்து அழைத்து வந்து வேலை செய்ய வைக்கலாம்.
இந்த விசாவிற்கு விண்ணப்பம் செய்ய குறிப்பிட்ட அந்த நிறுவனம் அமெரிக்காவிலும், வெளிநாட்டில் ஏதேனும் ஒரு நாட்டில் தன்னுடைய தொழிலை நிறுவி இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் நபர் கடைசி மூன்று ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் வேலை செய்திருக்க வேண்டும் அதில் ஓராண்டுக்காவது மேலாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பதவிகளை வகித்து இருக்க வேண்டும்.
O-1 விசா: O-1 விசாவும் அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி பணிபுரிவதற்காக வழங்கப்படும் ஒரு விசாவாகும். ஒரு குறிப்பிட்ட துறையில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றிய , ஒரு சாதனையை நிகழ்த்திய நபரை நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு தற்காலிகமாக வரவழைத்து வேலை வழங்குவதற்கு இந்த விசாவை பயன்படுத்திக் கொள்ளலாம். அறிவியல் ,கல்வி ,தொழில் , கலை, ஊடகப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த சாதனையாளர்களுக்கு இந்த விசா வழங்கப்படும். அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த விசாவை ஸ்பான்சர் செய்ய வேண்டும்.
EB -5 முதலீட்டாளர் விசா: அமெரிக்காவில் ஒரு கணிசமான தொகையை முதலீடு செய்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு விசா ஆகும். அமெரிக்காவில் 8 லட்சம் டாலர் அளவிற்கு முதலீடு செய்திருக்க வேண்டும், அதன் மூலம் ஒரு தொழில் உண்டாகி குறைந்தது 10 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகி இருக்க வேண்டும். இவ்வாறு முதலீடு செய்யக்கூடிய நபருக்கு ஈபி-5 பிரிவில் விசா வழங்கப்படுகிறது. முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு நிபந்தனையுடன் கூடிய கிரீன் கார்டும் பின்னர் அவருக்கு நிரந்தர குடியுரிமையும் வழங்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை ஈபி -5 விசாவிற்கு விண்ணப்பம் செய்பவர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இந்தியர்களே அதிகம் இவ்வகை விசாவை நாடுகிறார்களாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications