அமெரிக்க அதிபராக வரும் 20ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்வில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இருக்கிறார். அவர் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியில் அமர்கிறார். 78 வயதாகக் கூடிய டிரம்ப் வாஷிங்டன் நகரில் இருக்கும் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெய்சங்கர் அமெரிக்காவில் புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்படக்கூடிய பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடனும் முக்கிய ஆலோசனையும் நடத்த இருக்கிறார்.
அதேபோல ஜப்பான் சார்பாக ஜப்பான் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் டகேசி இவாயா, ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் பென்னி வாங் ஆகியோரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
அர்ஜென்டினா அதிபர் சேவியர் மிலே பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இவர் ட்ரம்புக்கு மிகவும் ஆதரவாக இருக்கக்கூடிய ஒரு நபர். அதேபோல ஹங்கேரி நாட்டின் அதிபர் விக்டர் ஆர்பன் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
சீனாவை பொருத்தவரை அந்நாட்டு அதிபர் ஸீ ஜின்பிங்குக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது . ஆனால் அவருக்கு பதிலாக துணை அதிபரான ஹான் ஸெங் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ப பங்கேற்கிறார்.
இத்தாலி பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார் .பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வலதுசாரி அரசியல்வாதியான எரி ஸெம்மர் ,பிரிட்டனை சேர்ந்த வலதுசாரி அரசியல்வாதியான நிகழ் ஃபரேஜ் ஆகியோரும் டிரம்பின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
பிரிட்டன் மற்றும் ஜெர்மனி நாடுகளின் தூதர்கள் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். முன்னாள் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பிரேசில் நீதிமன்றத்தில் போலசனாரோ மீதான வழக்கு நடைபெற்று வருவதால், அந்நாட்டு நீதிமன்றம் அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை.
தற்போது அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரும் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளிண்டன், ஜார்க் டபிள்யூ புஷ் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
அமேசான் நிறுவனத்தின் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், மெடாவின் மார்க் ஜக்கர்பெர்க், டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் ஆகியோர் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் டிம் கும், கூகுளின் சுந்தர் பிச்சை ஆகியோரையும் பதவியேற்பு நிகழ்ச்சியில் காணலாம்.
Story written by: Devika
More From GoodReturns

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications